பொது செய்தி

தமிழ்நாடு

‛‛கோவை''க்காய் ஆகிறது கோவக்காய்: கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு 'பறந்து செல்கிறது'

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
கோவை: கோவையில் விளைவிக்கப்படும் நாட்டு கோவக்காய், வெள்ளரிக்காய், பாகற்காய் ஆகியவை ஷார்ஜாவிலுள்ள நீரிழிவு நோயாளிகளுக்காக, விமானங்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான, ஷார்ஜாவில் இந்தியர்கள் பலர் தகவல் தொழில்நுட்பம், கட்டட வடிவமைப்பு மற்றும் கட்டுமானப்பொறியாளர்களாக, பல துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.அங்குள்ள

கோவை: கோவையில் விளைவிக்கப்படும் நாட்டு கோவக்காய், வெள்ளரிக்காய், பாகற்காய் ஆகியவை ஷார்ஜாவிலுள்ள நீரிழிவு நோயாளிகளுக்காக, விமானங்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.latest tamil newsஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான, ஷார்ஜாவில் இந்தியர்கள் பலர் தகவல் தொழில்நுட்பம், கட்டட வடிவமைப்பு மற்றும் கட்டுமானப்பொறியாளர்களாக, பல துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
அங்குள்ள வாழ்க்கை நடைமுறை காரணமாக, இளம் வயதிலேயே அங்கும் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்களுக்கு, நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவர்களின் அறிவுரைப்படி, இயற்கையாக விளையும் கோவக்காய், வெள்ளரிக்காய், பாகற்காய் ஆகியவற்றை காலை உணவாகவோ அல்லது காலை உணவின் ஒரு பகுதியாகவோ சாப்பிடுகின்றனர். அதனால் கோவையில் விளையும், இக்காய்கள் ஷார்ஜாவுக்கு அட்டை பெட்டிகளில், கோவை - ஷார்ஜா விமானத்தில் நாளொன்றுக்கு ஒன்றரை முதல் இரண்டு டன் வரை, கொண்டு செல்லப்படுகிறது.


latest tamil newsவிவசாயிகள் கூறுகையில், 'கோவையிலுள்ள கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில், குறிப்பிட்ட சில கிராமங்களில் மட்டுமே ஏற்றுமதி செய்வதற்காக மட்டுமே நல்ல தரமான இயற்கை முறையில் காய்கறி விளைவிக்கப்படுகின்றன' என்றனர்.


விமானத்தில் இடமில்லை


'ஏர் அரேபியா 'விமானத்தில் உள்ள 170 இருக்கைகளும் தினமும் நிரம்பி விடுகின்றன. சில நாட்களில் ஏர் அரேபியா, ஏர்பஸ் 320 விமானங்களையும் அனுப்புகிறது. சவூதி அரேபியாவுக்கு காய்கறி அனுப்ப தனி சரக்கு விமானம் எதுவும் இல்லை.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
03-டிச-202117:19:48 IST Report Abuse
தத்வமசி மாவட்ட கல்வி அலுவலர் எங்கள் பள்ளிக்கு வரும் போது, மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து இந்த காய் மற்றும் அதன் இலைகளை பறித்து அடுப்பு கரியுடன் சேர்த்து அரைத்து கரும்பலகையில் தடவி மகிழ்ந்துள்ளோம். இப்போது இந்த கோவைக்காய் முக்கியமான பதார்த்தமாக மாறி விட்டது.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
03-டிச-202116:17:17 IST Report Abuse
DVRR யாரு சொன்னது கோவைக்காய் வெறும் நீரிழிவு நோய்க்கு என்று? ஆண்மைத்தன்மை நீடிக்க (புரிஞ்சிருக்கும் என்று நினைக்கின்றேன் ) பேஸ் பூக்களே ஒரு வீடியோ நேற்று தான் பார்த்தேன் என்னமா அந்த காய்கறி செய்து அதை சாப்பிட்டால் ......என்று கதையோ கதை. அது உண்மையென்றால் இது அதற்க்காகத்தான் 4 பொண்டாட்டி ஊருக்கு செல்கின்றது என்று ருசுவாகின்றது.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். ஆக ஆக ஆஹா!! எங்கள் தளபதி ஆட்சியின் சாதனை பாரீர் ! கோவை மண்டலத்தை கோவைக்காய் மண்டவமாய் மாற்றிய சாதனையை பாராட்ட சங்கிகளுக்கு மனம் வருமா??.ஆக கொங்கு சீமையில் தேனாறும் பாலாறும் ஓட ஆரம்பித்து விட்டது.ஆனாலும் நன்றி கெட்ட சங்கிகள் தளபதிக்கு ஓட்டுப் போட்டு மேயர் ஆக்குவார்களா???
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
03-டிச-202122:38:52 IST Report Abuse
John Millerகோவைக்காயை சாப்பிடுகிறீர்களோ இல்லையோ தளபதியின் பலத்தை சாப்பிடுவது உங்களுக்கு கொள்ளை இன்பம் போல்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X