பொது செய்தி

இந்தியா

அன்று கற்பனை இன்று நிஜமானதா?: ஒமைக்ரான் பெயரில் 58 ஆண்டுக்கு முன்பு வெளிவந்த இத்தாலி சினிமா!

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் பெயரில் 1963ம் ஆண்டே திரைப்படம் வெளியானதாக சினிமா போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.உலகை கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தற்போது ஒமைக்ரான் வைரசாக மாறி உலக நாடுகளை அச்சுறுத்த துவங்கியுள்ளது. இந்த ஒமைக்ரான் வைரஸ் குறித்து 1963ம் ஆண்டே 'தி ஒமைக்ரான் வேரியன்ட்' என்ற பெயரில் வெளிநாட்டில்
Omicron, Movie, Fact Check, Omicron Variant, SciFi, ஒமைக்ரான், திரைப்படம், உண்மை

புதுடில்லி: உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் பெயரில் 1963ம் ஆண்டே திரைப்படம் வெளியானதாக சினிமா போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.

உலகை கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தற்போது ஒமைக்ரான் வைரசாக மாறி உலக நாடுகளை அச்சுறுத்த துவங்கியுள்ளது. இந்த ஒமைக்ரான் வைரஸ் குறித்து 1963ம் ஆண்டே 'தி ஒமைக்ரான் வேரியன்ட்' என்ற பெயரில் வெளிநாட்டில் திரைப்படம் வெளியானதாக ஒரு செய்தி இணையத்தில் வேகமாக பரவியது. மேலும், அந்த படத்தின் போஸ்டராக சொல்லப்படும் புகைப்படத்தில், 'பூமி கல்லறையாக மாறிய நாள்' என்னும் வாசகமும் இடம்பெற்றிருந்தது. இதனை பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் பகிர்ந்துள்ளார்.


latest tamil news


உண்மையில் 'தி ஒமைக்ரான் வேரியன்ட்' என்னும் திரைப்படம் வெளியானதா என ஆராய்ந்ததில், அந்த போஸ்டர் சித்தரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது, SUCESOS EN LA IV FASE (பேஸ் 4) என்ற பெயரில் 1974ல் வெளியான படத்தின் போஸ்டரை மாற்றி ஒமைக்ரான் பெயரில் சிலர் பரவவிட்டுள்ளனர். இது தெரியாமல், பலரும் உண்மை என நம்பி அப்போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.


latest tamil news


அதேநேரத்தில், அதே 1963ம் ஆண்டு 'ஒமைக்ரான்' என்ற பெயரில் இத்தாலிய படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. காமெடி, சயின்ஸ் பிக்சன் வகையில் உருவாக்கப்பட்ட இப்படம், வேற்று கிரகவாசி பூமியில் வசிக்கும் ஒருவரை அழைத்து செல்வது போன்று கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டரும் திடீரென வைரலானது. ஆனால், இந்த 'ஒமைக்ரான்' திரைப்படத்தில் வைரஸ், தொற்றுநோய் குறித்து எந்த காட்சிகளும் அமைக்கப்படவில்லை. இருந்தாலும், ஒமைக்ரான் பெயரில் வெளியான படப்போஸ்டர் பரவி வருகிறது.

உலகளவில் பிரபலமான பல விஷயங்கள் முன்பே சினிமா வகையிலோ, புத்தகத்திலோ குறிப்பிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் துவங்குவதற்கு முன்பே, 2008ம் ஆண்டு சில்வியா பிரவுன் எழுதிய, 'எண்ட் ஆஃப் டேஸ்' (End of Days) என்ற தலைப்பில் வெளியான புத்தகத்திலும் கொரோனா குறித்து சரியாக கணித்து எழுதியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல், 1993ம் ஆண்டு வெளியான சிம்ப்சன் கார்ட்டூன் தொடரின் 4வது சீசனின் 21வது எபிசோடில் ஜப்பானில் இருந்து கொரோனா வைரஸ் தோன்றியதாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
03-டிச-202117:41:07 IST Report Abuse
Columbus This is fake, d for fun. Look in Factcheck.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
03-டிச-202117:27:43 IST Report Abuse
NicoleThomson சீனர்கள் வேற்று கிரக வாசிகள் தானே
Rate this:
Cancel
Rawji - Toronto,கனடா
03-டிச-202112:10:32 IST Report Abuse
Rawji கிரேக்க மொழி எழுத்துக்கள் நிறைய பயன்பாட்டுக்கு இருகிறது இது கிரீ க்க மொழி அல்பாபெட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X