பொது செய்தி

தமிழ்நாடு

145 அடியை முல்லை பெரியாறு எட்டக்கூடாது என்பதால் தண்ணீரை திறந்தோம்: கேரளாவிற்கு துரைமுருகன் பதில்

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 145 அடியை எட்டும் நிலை ஏற்பட்டதால் தான் அணையை திறந்து விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது. மொத்த உயரம் 152 அடி. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை நீர் தேக்கலாம். நீர்பிடிப்பில் பெய்த
முல்லை பெரியாறு,அணை, தண்ணீர், கேரளா, துரைமுருகன், பதில், அமைச்சர்,

சென்னை: முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 145 அடியை எட்டும் நிலை ஏற்பட்டதால் தான் அணையை திறந்து விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது. மொத்த உயரம் 152 அடி. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை நீர் தேக்கலாம். நீர்பிடிப்பில் பெய்த மழையால் அணை நீர்மட்டம் சமீபத்தில் 142 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் 10 மதகுகளை தமிழக அரசு திறந்துவிட்டது. நீர்வரத்து குறைந்ததை அடுத்து ஏழு மதகுகள் மூடப்பட்டன.


latest tamil news



இந்நிலையில், முல்லை பெரியாறு அணையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மதகுகளை தமிழக அரசு திறந்தது. நீதிமன்ற அவமதிப்பு செயல். முல்லை பெரியாறு பற்றிய வழக்கு விசாரணைக்கு வரும் போது தமிழக அரசின் செயல் பற்றி தெரிவிப்போம் என கேரள அரசு குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசுடன் முதல்வர் பினராயி விஜயன் விரைவில் பேச உள்ளதாகவும் தெரிவித்தது.

இதற்கு பதிலளித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: அணைக்கு அளவுக்கு மீறி நீர் வரத்து கொண்டிருந்தது. தண்ணீர் திறக்காவிட்டால் 145 அடியை எட்டும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி142 அடியை தொட்டதும் அணையில் இருந்து நீரை திறந்து விட வேண்டியதாயிற்று. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலா - chennai,இந்தியா
03-டிச-202117:20:21 IST Report Abuse
பாலா அல்லாம் சரி அவரு என்ன கேக்கறாரு சொல்லிட்டு செய்யுங்க நம்மவரு "பட்டுகோட்டைக்கு வழி கேட்ட கொட்டைபாக்கு விலை 10 பைசான்னு சொல்றமாதிரி இருக்கு "
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
03-டிச-202113:02:20 IST Report Abuse
sankar இவ்ளோ நாளா யோசனை பண்ணி -
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
03-டிச-202112:44:11 IST Report Abuse
mindum vasantham மலையளிக்கும் தெலுகுவுக்கும் நடத்தப்படும் கட்சி தான் திராவிடம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X