கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில், தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அடிப்படை உறுப்பினர்களால், ஒற்றை ஓட்டின் வாயிலாக இணைந்தே தேர்வு செய்யப்படுவர் என, கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்து
ChennaiHC, ADMK, Election, KCPalanisamy, Tamilnadu, OPS, EPS, சென்னை, ஐகோர்ட், உயர்நீதிமன்றம், கேசி பழனிசாமி, அதிமுக, உட்கட்சி தேர்தல், வழக்கு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில், தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அடிப்படை உறுப்பினர்களால், ஒற்றை ஓட்டின் வாயிலாக இணைந்தே தேர்வு செய்யப்படுவர் என, கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்து சமீபத்தில் நடந்த அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, உட்கட்சி தேர்தலை நேற்று (டிச.,2) கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிச.,7ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை 8ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியது.


latest tamil news


இந்நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி முன்னாள் அதிமுக எம்.பி., கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,'ஒற்றை தலைமை வேண்டும் என்ற கட்சி நிறுவனர், உறுப்பினர்களின் நோக்கத்திற்கு எதிராக விதி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் செயல்படுகின்றனர். தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news


கே.சி.பழனிசாமியின் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, இன்று மதியம் நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தார். அப்போது, 'கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பழனிசாமிக்கு வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை. முறைகேடுகள் நடந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்ய தயங்க மாட்டேன்,' எனக்கூறி, தேர்தலை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்ததுடன், வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி பதிலளிக்குமாறும் உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
04-டிச-202102:30:28 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam கட்சியில் அங்கத்துவம் இல்லாதவருக்கு என்ன உரிமை இருக்கின்றது. அதிமுகவுக்கு எதிராகச் சதிசெய்பவர்களில் இவரும் ஒருவர்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
03-டிச-202117:47:06 IST Report Abuse
சீனி சசிகலா தலைமையில் அதிமுக விளங்காமல் போய்விடும்.
Rate this:
Cancel
03-டிச-202116:33:56 IST Report Abuse
அப்புசாமி இப்பத்தான் போட்டி வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவருக்கு அடி, உதையுடன் செம கெவனிப்பு நடந்ததா செய்தி வந்தது. நீதிபதிகளும் இந்த செய்தியைப் படிச்சுட்டு நியாயமா(?) தீர்ப்பு வழங்கிட்டாங்க போலிருக்கு. நமக்கேன் வம்புன்னு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X