பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம்: அரசாணை வெளியீடு

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை: தமிழக அரசு போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணை இன்று (டிச.,03) வெளியிடப்பட்டது.தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம்
போட்டித்தேர்வு, தமிழ், கட்டாயம், தமிழ் மொழித்தாள், தமிழக அரசு, அரசாணை

சென்னை: தமிழக அரசு போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணை இன்று (டிச.,03) வெளியிடப்பட்டது.

தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்வதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.


latest tamil news


அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;
* அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம்.
* தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ்/ பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
* தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
* கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
03-டிச-202121:57:34 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan முட்டாள்தனமான அரசாணை. தமிழின் பெரால் பிழைப்பு நடத்தும் திராவிடக் கூட்டம் திருந்தவே திருந்தாது
Rate this:
Cancel
03-டிச-202120:39:52 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K அரசு வேலைகளில் திறமையானவர்கள் கிடைப்பது அரிதாகி விடும். ஹிந்தி தான் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். பின் ஏன் ஆங்கிலத்தை புறக்கணிக்க வேண்டும்? அண்டை மாநில தொழிலாளர்கள் கூட மூன்று மொழிகளில் சக்கை போடு போடுகிறார்கள். இங்கு வரும் காலத்தில் தமிழக அரசு ஊழியர்கள் டுபாக்கூர் ஊழியர்களாக வலம் வருவார்கள். நிச்சயம் எழுதிக் கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
appaatakkar - kosavapatti,இந்தியா
03-டிச-202120:38:21 IST Report Abuse
appaatakkar இது தமிழ்நாட்டில் உள்ள அரசு பணிகளுக்கு மட்டும் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மற்றபடி வேறு மொழி பேசும் மக்களுக்கு எதிரானது இல்லை. அரசு பணிகளில் தமிழ் தெரியாமல் இருந்தால் அதை ஏற்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X