சிகரெட் ஊதித்தள்ளும் பாக்., பெண்கள்: விவகாரத்து அதிகரிக்கிறதாம்: ‛பற்ற வைத்தார்' பாக்., பெண் எம்.பி.,

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பெண்கள் புகைப்பிடிப்பதால் விவாகரத்து அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் பெண் எம்.பி., ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் பெண் எம்.பி.,யான டாக்டர் நவுஷீன் ஹமீத், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற புகையிலை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானில் பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம்
Pakistan, MP, Smoking, Women, Leading Cause, Rising Divorce Rate, பாகிஸ்தான், பெண் எம்பி, பெண்கள், புகைப்பிடித்தல், விவாகரத்து, அதிகரிப்பு

இஸ்லாமாபாத்: பெண்கள் புகைப்பிடிப்பதால் விவாகரத்து அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் பெண் எம்.பி., ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பெண் எம்.பி.,யான டாக்டர் நவுஷீன் ஹமீத், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற புகையிலை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானில் பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதே, சமீபத்தில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை உயரக் காரணமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தானில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் அதிகரித்திருக்கிறது.


latest tamil news


புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதனால் புகைப்பிடிப்பவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் சமூக ரீதியிலான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அப்படி பாதிக்கப்பட்ட பெண்களை தனிப்பட்ட முறையில் நானே பார்த்திருக்கிறேன். புகைப்பிடிக்கும் பெண்கள் திருமணம் செய்த பின்னர் அவர்கள் விவாகரத்தை சந்திக்க நேர்கிறது. ஏனென்றால் இந்த பழக்கத்தை புகுந்த வீட்டார் ஏற்றுக்கொள்வதில்லை. இவ்வாறு அவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், பாகிஸ்தானில் விவாகரத்து வழக்குகள் 58 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் உலகிலேயே புகையிலை பொருட்கள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் நாடுகளுள் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பது சிகரெட் பயன்பாட்டு அதிகரிப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மலிவாக புகையிலை பொருட்கள் கிடைப்பதால், பலரும் புகைப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இதனால், பாகிஸ்தானில் மொத்த இறப்புகளில் 11 சதவீதம் புகைப்பிடிப்பதால் ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
04-டிச-202117:42:28 IST Report Abuse
g.s,rajan Equal rights for women .Smoking among women is on the rising tr is causing concern g.s.rajan Chennai.
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
04-டிச-202112:15:19 IST Report Abuse
Raman இதென்ன பிரமாதம் நம்ம பெண்கள் தண்ணி சிகரெட் கஞ்சா மற்றும் எல்லா போதை பொருள்களும் பயன்படுத்துறாங்க, . போதையில் காரை ஒட்டி விபத்து ஏற்படுத்துறாங்க, கூட போவோர்களை கொலை செய்யிறாங்க, போலீஸ் கிட்டே சண்டை போடுறாங்க , இன்னும் என்னன்னவோ .. இதிலேயும் பாக்கிஸ்தான் பெண்கள் கீழே தான் ஹி ஹி ஹி
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
04-டிச-202102:56:55 IST Report Abuse
Milirvan ஒரே ஒரு சிரமம்.. புர்க்கா பத்திக்க போவுது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X