பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் நடத்தையை கண்டித்து பா.ஜ., எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகளின் மோசமான நடத்தையை கண்டித்து பார்லிமென்ட் வளாகத்தில் பா.ஜ., எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை(நவ., 29) துவங்கியது. அப்போது, கடந்த கூட்டத்தொடரில் மோசமாக நடந்து கொண்டதற்காக பல கட்சிகளை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,க்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
bjp,mp, parliment, opposition, MPS, protest,

புதுடில்லி: லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகளின் மோசமான நடத்தையை கண்டித்து பார்லிமென்ட் வளாகத்தில் பா.ஜ., எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை(நவ., 29) துவங்கியது. அப்போது, கடந்த கூட்டத்தொடரில் மோசமாக நடந்து கொண்டதற்காக பல கட்சிகளை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,க்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய போதும், அது ஏற்கப்படவில்லை.

இதனால், பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள மஹாத்மா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள், உள்ளேயும் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபடுவதால், இரு அவைகளும் தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.


latest tamil news


இந்நிலையில், பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சிகளின் மோசமான நடத்தையை கண்டித்து பார்லிமென்ட் வளாகத்தில் பா.ஜ., எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி கோஷம் போட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-டிச-202106:14:01 IST Report Abuse
Mani . V அதையே முன்பு இவர்கள் செய்த பொழுது கண்ணியமாகத் தெரிந்ததா?
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
04-டிச-202118:14:34 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்அவை வரலாற்றிலேயே அவையின் நடவடிக்கைகளை புறக்கணிக்கத் துவங்கியது, கூச்சல் குழப்பத்தை அறிமுகம் செய்தது காங்கிரஸ்தான்...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-டிச-202104:50:05 IST Report Abuse
J.V. Iyer யார் எதிர் கட்சிகள்? தமிழகமக்கள் அனுப்பிவைத்த எம்பீக்கள். இதற்கு தமிழக மக்கள் வெட்கப்படவேண்டும்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
03-டிச-202121:29:28 IST Report Abuse
sankaranarayanan ஒன்று இந்த இடத்திலிருந்து மகாத்மா காந்தி சிலையை அகற்றி வேறு ஒரு இடத்தில் வைக்க வேண்டும். இல்லையேல் மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் செல்லாத படி தண்ணீர் தடாகங்கள் அல்ல சுவர் எழுப்பி அந்த இடத்தில் யாரும் நெருங்ககூட விடாமல் பாது காக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு விடியல் வரும். முணுக்கென்றால் உடனே மகாத்மா காந்தி சிலை முன்பு கூடுவது அபத்தம். வேறு எங்காவது கூடட்டும். யாரும் கேபாரில்லில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X