காற்று மாசுக்கு பாகிஸ்தானே காரணம்: உச்சநீதிமன்றத்தில் உ.பி., அரசு வாதம்

Added : டிச 03, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள் தான் காற்று மாசுக்கு காரணம் எனக் கூறிய உ.பி., வழக்கறிஞரிடம், 'பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளைத் தடை செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களா?,' உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.டில்லியில் காற்று மாசு படுமோசமான நிலையில் உள்ளது. இது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு நான்கு வாரங்களாக
Air Pollution, Pakistan, UP,  Ban Industries, Chief Justice, காற்று மாசு, பாகிஸ்தான், உபி, உத்தரபிரதேசம், உச்சநீதிமன்றம்

புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள் தான் காற்று மாசுக்கு காரணம் எனக் கூறிய உ.பி., வழக்கறிஞரிடம், 'பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளைத் தடை செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களா?,' உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டில்லியில் காற்று மாசு படுமோசமான நிலையில் உள்ளது. இது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு நான்கு வாரங்களாக விசாரித்து வருகிறது. நேற்றைய (டிச.,02) நடந்த விசாரணையின்போது, டில்லி, என்சிஆர் பகுதியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் குறைக்க 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காற்று தர மேலாண்மை அமைப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது உத்தரப் பிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதாடினார்.


latest tamil news


அப்போது அவர் கூறுகையில், 'டில்லி, என்.சி.ஆர் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள்தான் காரணம். காற்று மாசுக்கும் உ.பி., மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,' எனக்கூறினார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 'நீங்கள் சொல்வதைப் பார்த்தால், பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளைத் தடை செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களா? உங்கள் குறைகளை காற்று தர மேலாண்மை ஆணையத்திடம் தெரிவியுங்கள், அவர்கள் தீர்வு வழங்குவார்கள்,' எனக் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-டிச-202106:16:50 IST Report Abuse
Mani . V ஏன் பாஸ், பாகிஸ்தானோடு மட்டும் நிறுத்தணும்? உகாண்டா, இலங்கை,..... இதையும் சேர்த்து சொல்லலாமே? அத்துடன் இதற்கு காரணம் ராபர்ட் கிளைவ் என்றும் சொல்லலாம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-டிச-202104:50:57 IST Report Abuse
J.V. Iyer அப்படி இருந்தால் விமானத்தாக்குதல் நடத்தலாமே?
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
04-டிச-202103:55:35 IST Report Abuse
Priyan Vadanad அற்புதமான கருத்து. இது ஒன்றே போதும் பிஜேபி எப்படி பொழப்பு நடத்துது என்பதை காட்ட. தென்னிந்தியாவில் மழை வெள்ளம் பெருகுவதற்கு காரணம் பாகிஸ்தான் எல்லா மேகங்களையும் அந்தமான் பகுதிக்கு திசை மாற்றி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக்கி .... சாரி எப்படி முடிக்கணும்னு தெரியல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X