3 மாதம் சம்பளம் இல்லை: புலம்பும் பாக்., தூதர்

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: '' பணவீக்கம் காரணமாக, கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், நாங்கள் எத்தனை காலம் அமைதியாக இருந்து வேலை பார்ப்போம் '' என பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு கேள்வி எழுப்பி, செர்பியா நாட்டிற்கான பாகிஸ்தான் தூதர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.பாகிஸ்தானில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த அக்டோபர் பண வீக்கம் கடுமையாக
pakistan, imrankhan, embassy, serbia, pm,

இஸ்லாமாபாத்: '' பணவீக்கம் காரணமாக, கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், நாங்கள் எத்தனை காலம் அமைதியாக இருந்து வேலை பார்ப்போம் '' என பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு கேள்வி எழுப்பி, செர்பியா நாட்டிற்கான பாகிஸ்தான் தூதர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த அக்டோபர் பண வீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், உணவு பொருட்கள் விலை இரு மடங்காகி உள்ளது. நெய், எண்ணெய், சர்க்கரை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை இரு மடங்காகி உள்ளது.

இதனால், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பணவீக்கம், பொருளாதார சீரழிவு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றிற்கு மக்கள் விலை கொடுத்து வருகின்றனர். ஏழைகள் மட்டும் அல்லாமல், அரசு பணியில் உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசு உணர்ந்து கொள்ள மறுக்கிறது என எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷபாஷ் ஷெரீப் குற்றம்சாட்டினார்.


latest tamil news




இந்நிலையில், செர்பியாவிற்கான பாகிஸ்தான் தூதர் வெளியிட்ட அறிக்கையில், முந்தைய வரலாற்று சாதனைகளை உடைக்கும் அளவிற்கு, பணவீக்கம் உயர்ந்து வருகிறது. கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், நாங்கள் அமைதியாக இருந்து உங்களுக்காக எவ்வளவு காலம் அமைதியாக வேலை பார்ப்போம் என இம்ரான் கான் எதிர்பார்க்கிறார். பள்ளி கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால், எங்களது குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இம்ரான் கானை விமர்சனம் தெரிவித்தும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-டிச-202104:46:01 IST Report Abuse
J.V. Iyer இம்ரான் காஷ்மீரிப்பற்றி கவலைப்படும், பாகிஸ்தானிப்பற்றி நினைக்க ஏது நேரம்?
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
04-டிச-202104:02:17 IST Report Abuse
SUBBU பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் வெளிநாட்டுக்கு எவ்வளவு சீக்கிரம் தப்பியோட முடியுமோ அவ்வளவு விரைவாக தப்பி ஓடினால் அவர் உயிருக்கு உத்திரவாதம்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-டிச-202101:26:56 IST Report Abuse
Natarajan Ramanathan பண மதிப்பிழப்பு செய்ததில் இருந்தே அச்சடித்து வைத்துள்ள ஐந்து லட்சம் கோடி இந்திய கள்ளப்பணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறது பாகிஸ்தான். அதன் பொருளாதாரமே வீழ்ந்துவிட்டது. மத தீவிரவாதம் கற்றுத்தரும் மதரசா பள்ளிகளில் இலவச கல்வி கிடையாதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X