வேலுார்: வரும் ஆண்டு, 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலுார் மாவட்டம், காட்பாடி வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் இன்று (டிச.,03) நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று, 166 மாற்றுத்திறனாளிகளுக்கு 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது: காவிரி - குண்டாறு இணைப்பு மத்திய அரசு திட்டமாகும். அதை நிறைவேற்றுவது அவர்கள் கையில் தான் உள்ளது. எக்காரணம் கொண்டும் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு அனுமதிக்காது. ஒரு வாரத்தில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுத்து முழு விவரம் அளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் ஒரு வாரத்திற்குள் முடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும். தமிழகத்தில் நடப்பாண்டு 1,000 தடுப்பணைகள் கட்டப்படும். இதில் முதல்கட்டமாக 100 தடுப்பணைகள் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாற்றுத்திறனாளியான ஒரு சிறுவனுக்கு விழா மேடையில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE