பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியீடு

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கடந்த செப்.,9ம் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின்போது, உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அளித்திடும் வகையில், 'பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்' என
Tamilnadu, GO, Press Welfare Board, தமிழக அரசு, பத்திரிகையாளர், நல வாரியம், அரசாணை

சென்னை: பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த செப்.,9ம் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின்போது, உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அளித்திடும் வகையில், 'பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு இன்று (டிச.,03) அரசாணை வெளியிட்டுள்ளது.


latest tamil news


அதன்படி, நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஏனைய பிற நலத்திட்ட உதவிகளுடன், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருக்கலைப்பு / கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் நலவாரியத்தின் மூலம் வழங்க இந்த அரசாணை வழிவகை செய்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-டிச-202101:56:43 IST Report Abuse
Bhaskaran பத்திரிகையாளர்களுக்கு மட்டும்தான் உதவியா அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் உதவி செய்யவேண்டும் கேரளாவிலும் பத்திரிக்கை துறையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் அரசு தருகிறதாம்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-டிச-202101:21:01 IST Report Abuse
Natarajan Ramanathan அரசுக்கு ஐந்து பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாத வக்கீல்கள் மற்றும் சில ஊடக பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் நலவாரியம் அமைப்பது தண்டம் தான்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
03-டிச-202120:34:52 IST Report Abuse
elakkumanan முட்டு பாய்ஸ் நல சங்கம் ன்னு பெரு வைக்கலாம்ல... உண்மையை சொன்னேன்.. உண்மைனா, டீம்காவுக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X