பொது செய்தி

இந்தியா

7 வரை ஆன்லைனில் பாடம்: பா.ஜ., - எம்.எல்.சி., விருப்பம்

Added : டிச 03, 2021
Share
Advertisement
மைசூரு:''கர்நாடகாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஆடு, மாடுகள் போன்று வகுப்பறைகளில் மாணவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ஏழாம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் நடத்த அரசு உத்தரவிட வேண்டும்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் வலியுறுத்தினார்.இது குறித்து மைசூரில் அவர் கூறியதாவது:தற்போது நடக்கும் சட்ட மேலவை தேர்தலில் போட்டியிட்டுள்ளவர்கள், தங்கள் சொத்து விபரங்கள்
 7 வரை ஆன்லைனில் பாடம்: பா.ஜ., - எம்.எல்.சி., விருப்பம்

மைசூரு:''கர்நாடகாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஆடு, மாடுகள் போன்று வகுப்பறைகளில் மாணவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ஏழாம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் நடத்த அரசு உத்தரவிட வேண்டும்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் வலியுறுத்தினார்.
இது குறித்து மைசூரில் அவர் கூறியதாவது:தற்போது நடக்கும் சட்ட மேலவை தேர்தலில் போட்டியிட்டுள்ளவர்கள், தங்கள் சொத்து விபரங்கள் 40 கோடி ரூபாய் முதல் 1,700 கோடி ரூபாய் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.இத்தகைய நபர்களுக்கு டிக்கெட் வழங்கியதன் மூலம், அரசியல் மாண்பு சீர்குலையும் என்பது தலைவர்களுக்கு தெரியாதா.
டிக்கெட் வழங்கிய, சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி போன்ற தலைவர்கள் என்ன சொல்ல விரும்புகின்றனர். வாக்காளர்களுக்கு பல விதமான ஆசை வார்த்தைகள் கூறி தேர்தல் புனிதத்தை பாழாக்கி விட்டனர்.சில கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் என் வீட்டுக்கு வந்து, 'பஜாரில் எவ்வளவு போகிறது' என்று கேட்டனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
ஹாசனில், 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, 1 லட்சம் ரூபாய் வரை வாக்காளர்களுக்கு வழங்கப் படுகிறது என்றனர். இங்கு எவ்வளவு வழங்குகின்றனர் என கேட்டதும், தேர்தல் நிலை எதை நோக்கி செல்கிறது என்பதே புரியவில்லை.அரசியல் தலைவர்கள், தாங்கள் செய்வது சரியா என்று மனதை தொட்டு பார்த்து கொள்ள வேண்டும்.
கர்நாடகாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மாணவர்களை ஆடு, மாடுகள் போன்று வகுப்பறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 7ம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.கல்வி துறை அமைச்சர் மிகுந்த எச்சரிக்கையுடன் உடனடியாக தீர்மானம் எடுக்க வேண்டும்.
மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை முழுதும் அமல்படுத்தப்படும்.அமைச்சர் சோமசேகர் சில அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விஷயங்களை பகிரங்கமாக குற்றஞ்சாட்டியது தவறு. யாரையும் மனதளவில் நோகடிக்க கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X