'ஆன்லைன்' விளையாட்டு ஒழுங்குபடுத்த கோரிக்கை

Added : டிச 03, 2021
Share
Advertisement
புதுடில்லி:“ஆன்லைன் விளையாட்டு துறையை மத்திய அரசு ஒழுங்குபடுத்த வேண்டும்,” என, ராஜ்யசபாவில் பா.ஜ., - எம்.பி., சுஷில் குமார் மோடிகோரிக்கை வைத்தார்.ராஜ்யசபா கூடியதும், பா.ஜ.,வை சேர்ந்த எம்.பி., சுஷில் குமார் மோடி, 'ஆன்லைன்' விளையாட்டு துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது: ஆன்லைன் விளையாட்டு ஒரு பெரிய போதைப் பழக்கம் போல் மாறி வருகிறது. கோடிக்கணக்கான
 'ஆன்லைன்' விளையாட்டு ஒழுங்குபடுத்த கோரிக்கை

புதுடில்லி:“ஆன்லைன் விளையாட்டு துறையை மத்திய அரசு ஒழுங்குபடுத்த வேண்டும்,” என, ராஜ்யசபாவில் பா.ஜ., - எம்.பி., சுஷில் குமார் மோடிகோரிக்கை வைத்தார்.
ராஜ்யசபா கூடியதும், பா.ஜ.,வை சேர்ந்த எம்.பி., சுஷில் குமார் மோடி, 'ஆன்லைன்' விளையாட்டு துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது: ஆன்லைன் விளையாட்டு ஒரு பெரிய போதைப் பழக்கம் போல் மாறி வருகிறது. கோடிக்கணக்கான இளைஞர்கள் அதற்கு அடிமையாகி உள்ளனர். இது, சூதாட்டத்திற்கும் வழிவகுக்கிறது. இளைஞர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்னையாகிவிடும்.
எனவே, 'கிரிப்டோகரன்சி' துறையைப் போல் இந்த துறையையும் ஒழுங்குபடுத்த வேண்டும். இந்த துறைக்கு விரிவான ஒழுங்குமுறை கட்டமைப்பை மத்திய அரசு விரைந்து உருவாக்க வேண்டும். அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் ஒரே மாதிரியான வரியை வசூலிக்க வேண்டும். ஒழுங்குமுறைகள் இல்லாவிட்டால், அவற்றுக்கு அடிமையாவதில் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்றுவது கடினமாகிவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரத்தை பரிசீலிக்கக்கோரி மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X