குழந்தைகளுக்கான தடுப்பூசி மத்திய அமைச்சர் தகவல்

Added : டிச 03, 2021
Share
Advertisement
புதுடில்லி:“குழந்தைகளுக்கான மூன்று கொரோனா தடுப்பூசிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன,” என, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பவார் தெரிவித்துள்ளார்.லோக்சபாவில் நேற்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பவார் கூறிய தாவது:தற்போது 12 - 18 வயதுக்கு உட்பட்டோருக்காக, 'சைடஸ் கேடிலா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு உள்ள 'சைகோவ் - டி' தடுப்பூசிக்கு மட்டுமே அவசர
 குழந்தைகளுக்கான தடுப்பூசி  மத்திய அமைச்சர் தகவல்

புதுடில்லி:“குழந்தைகளுக்கான மூன்று கொரோனா தடுப்பூசிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன,” என, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பவார் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் நேற்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பவார் கூறிய தாவது:தற்போது 12 - 18 வயதுக்கு உட்பட்டோருக்காக, 'சைடஸ் கேடிலா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு உள்ள 'சைகோவ் - டி' தடுப்பூசிக்கு மட்டுமே அவசர காலத்தில் பயன் படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்து உள்ளது.
இதைத்தவிர குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள மேலும் மூன்று தடுப்பூசிகள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி,2-18 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் 'கோவாக்சின்' தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் குழந்தைகளுக்காக 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனம் தயாரித்துள்ள, 'கோவிஷீல்டு' தடுப்பூசியும், 'பயாலஜிக்கல் - இ லிமிடட்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள 'கோர்பேவேக்ஸ்' தடுப்பூசியும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த தடுப்பூசிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பரிசோதனைகளில் கிடைக்கும் முடிவுகள் மற்றும் தரவுகள் அடிப்படையில் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X