எதிர்க்கட்சி எம்.பி.,க்களை கண்டித்து பா.ஜ., சார்பில் திடீர் போராட்டம்

Added : டிச 03, 2021
Share
Advertisement
புதுடில்லி:ராஜ்யசபாவில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 12 பேர், பார்லி., வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை கண்டித்து, பா.ஜ., - எம்.பி.,க்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கோஷமிட்டனர்முந்தைய மழைக்கால கூட்டத்தொடரில் சபை கட்டுப்பாடுகளை மீறியதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த
 எதிர்க்கட்சி எம்.பி.,க்களை கண்டித்து பா.ஜ., சார்பில் திடீர் போராட்டம்

புதுடில்லி:ராஜ்யசபாவில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 12 பேர், பார்லி., வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை கண்டித்து, பா.ஜ., - எம்.பி.,க்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.


கோஷமிட்டனர்

முந்தைய மழைக்கால கூட்டத்தொடரில் சபை கட்டுப்பாடுகளை மீறியதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,க்கள் 12 பேர், குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.காங்., கட்சியை சேர்ந்த ஆறு பேர், திரிணமுல் காங்., மற்றும் சிவசேனாவை சேர்ந்த தலா இருவர், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகளை சேர்ந்த தலா ஒருவர் என, 12 பேர் கூட்டத்தொடர் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.,க்கள், பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் பா.ஜ., - எம்.பி.,க்கள் சிலர், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டத்தை கண்டித்து காந்தி சிலையிலிருந்து அம்பேத்கர் சிலை வரை பேரணியாக சென்று கோஷமிட்டனர்.


சலசலப்பு

எதிர்க்கட்சிகளின் ஜனநாயக விரோத போராட்டத்தை கண்டித்து பேரணி நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே தங்கள் போராட்டத்தில் பா.ஜ.,வினர் தேவையின்றி தலையிடுகின்றனர் என, இரு சபைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் குற்றம் சாட்டினர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X