சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

வாரிசு தொகுதியில் மாமூல் வசூலிக்கும் நிர்வாகிகள்!

Added : டிச 03, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
வாரிசு தொகுதியில் மாமூல் வசூலிக்கும் நிர்வாகிகள்!''கமிஷனை கறாரா கேட்டு வம்பு பண்றாருங்க...'' என, பரபரப்பான தகவலுடன் பெஞ்சுக்கு வந்தார், அந்தோணிசாமி.''யாருவே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''திருச்சியில, ஆளுங்கட்சி சின்னத்துல நின்னு ஜெயிச்ச கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,வை தான் சொல்றேன்... இவரது தொகுதி முழுக்க, மாநகராட்சிக்குள்ள தான் வருதுங்க...''இனிக்க


 டீ கடை பெஞ்ச்


வாரிசு தொகுதியில் மாமூல் வசூலிக்கும் நிர்வாகிகள்!



''கமிஷனை கறாரா கேட்டு வம்பு பண்றாருங்க...'' என, பரபரப்பான தகவலுடன் பெஞ்சுக்கு வந்தார், அந்தோணிசாமி.''யாருவே அது...'' எனக் கேட்டார்,
அண்ணாச்சி.

''திருச்சியில, ஆளுங்கட்சி சின்னத்துல நின்னு ஜெயிச்ச கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,வை தான் சொல்றேன்... இவரது தொகுதி முழுக்க, மாநகராட்சிக்குள்ள தான் வருதுங்க...

''இனிக்க இனிக்க பேசுற எம்.எல்.ஏ., மாநகராட்சி சார்புல எந்தப் பணிக்கு டெண்டர் விட்டாலும், தனக்கு 15 சதவீதம் வந்துடணும்னு, அதிகாரிகளிடம் கறாரா கேட்கிறாருங்க...

''அதிகாரிகளோ, 'மொத்த கமிஷனே 15 சதவீதம் தான்... இதுல, எம்.எல்.ஏ.,க்களுக்கு 3 முதல் 5 சதவீதம் தான் வரும்'னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாருங்க... இதனால, பல பணிகளுக்கு டெண்டர் விட முடியாம அதிகாரிகள் தவிக்கிறாங்க... முதல்வரிடம் செல்வாக்கா இருக்கிறதா எம்.எல்.ஏ., காட்டிக்கிறதால, தி.மு.க.,வினரும் எதுவும் பேச முடியாம இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''வாரும் இருதயராஜ்... உடம்பு சவுகரியமா இருக்கா...'' என, நண்பரிடம் நலம் விசாரித்த அண்ணாச்சி, ''பயணியர் மாளிகையில கட்டப்பஞ்சாயத்து நடத்துதாரு வே...'' என்றபடியே தொடர்ந்தார்...

''சேலம் மாவட்டம், ஆத்துார் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதம்பி... இவர் போன முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தப்பவே, தொகுதி மக்களிடம் ஏடாகூடமா பேசி சர்ச்சையில சிக்குனாரு வே...

''இவர், ஆத்துார் நெடுஞ்சாலைத் துறை பயணியர் மாளிகை பக்கத்துல, தனக்காக ஒரு ஆபீஸ் வச்சிருக்காரு... ஆனா, பெரும்பாலான நேரம் பயணியர் மாளிகையில தான் இருக்காரு வே...

''அங்க இருந்தபடியே, சில பிரச்னைகள்ல கட்டப்பஞ்சாயத்து பேசி பைசல் பண்ணுதாரு... இப்ப எந்த அரசு பதவியிலயும் அவர் இல்லாட்டியும், பழைய பாசத்துல பயணியர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் சின்னதம்பியை அனுமதிக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''வி.ஐ.பி., தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் மேல கடும் அதிருப்தி நிலவுதாம் பா...'' என, கடைசி மேட்டருக்கு 'லீடு' தந்தார் அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு சீட் கேட்டிருக்கிற ஆளுங்கட்சி புள்ளிகள் பற்றி, உளவுத்துறை விசாரணை நடக்குதுன்னு ஏற்கனவே பேசியிருக்கோம்... இதுல, சேப்பாக்கம், புதுப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதி வட்ட நிர்வாகிகள், பொதுமக்களிடம் அதிகமா கெட்ட பெயர் வாங்கி வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிருக்குது பா...

''புது வீடு கட்டுறவங்க, பெட்டிக்கடை, தள்ளுவண்டி, வடை, சமோசா, தள்ளுவண்டி டிபன் கடை வியாபாரிகள், மீன்கள், பலசரக்கு பொருட்கள் ஏத்திட்டு போற வாகன உரிமையாளர்கள், தொழிலதிபர்கள்னு ஒருத்தர் விடாம, மாமூல் வசூல் பண்றாங்களாம்... இதுல, தினசரி, வாரம், மாதம்னு மூணு வகையா தரம் பிரிச்சு கல்லா கட்டுறாங்க பா...

''இவங்க பட்டியலை சேகரித்த உளவுத்துறை, 'இவங்களுக்கு கவுன்சிலர் சீட் தந்தா, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதிக்கு கெட்ட பெயரை வாங்கி தந்துடுவாங்க... அதனால, தகுதி வாய்ந்த இளைஞர் அணி நிர்வாகிகளை உதயநிதியே தேர்வு செய்து, கவுன்சிலர் சீட் தந்துட்டா பிரச்னை இருக்காது'ன்னு மேலிடத்துக்கு அறிக்கை குடுத்திருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-டிச-202119:20:22 IST Report Abuse
D.Ambujavalli உதய நிதியே தேர்ந்தெடுத்தால் மாமூல் ஒழுங்காக அவருக்குப் போய் சேரும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் எல்லா முறைகேடுகளிலும் அடிமைகளாக evi விடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X