தப்பி ஓடும் ஒமைக்ரான் நோயாளிகள்; தேடிப்பிடிக்க தீவிரம் காட்டும் கர்நாடகா அரசு

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் தனியார் ரத்தப் பரிசோதனை கூடம் ஒன்றில் கோவிட் சோதனைக்கு வந்த ஒமைக்ரோன் அறிகுறி கொண்ட இருவர் தப்பி ஓடிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் அசோக் கூறுகையில், கர்நாடக மாநிலம் முழுவதும் இதுவரை ஒமைக்ரான் அறிகுறி உள்ள 10 பேர்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் தனியார் ரத்தப் பரிசோதனை கூடம் ஒன்றில் கோவிட் சோதனைக்கு வந்த ஒமைக்ரோன் அறிகுறி கொண்ட இருவர் தப்பி ஓடிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



latest tamil news



இதுகுறித்து கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் அசோக் கூறுகையில், கர்நாடக மாநிலம் முழுவதும் இதுவரை ஒமைக்ரான் அறிகுறி உள்ள 10 பேர் காணவில்லை என்றும் விரைவில் அவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் உறுதி அளித்துள்ளார். இவர்களது விவரங்களைத் திரட்ட தற்போது மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார். 66 வயதாகிய ஒரு தென்னாப்பிரிக்க குடிமகன் ஒருவர் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.


latest tamil news



அவர் கடந்த நவம்பர் 20ஆம் தேதி கர்நாடகா வந்ததாகவும் ஏழு நாட்கள் கழித்து அவர் துபாய் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நபர் தங்கியிருந்த ஷாங்ரி லா விடுதி தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நபருடன் தொடர்பில் இருந்த 22 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஓமைக்ரான் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
04-டிச-202118:24:04 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் க்வாரன்டைன் செய்துவிடுவார்கள் என்பதால் தப்பி ஓடுகிறார்கள் அவர்கள் மூலம் வைரஸ் தொற்று மற்றவர்களுக்குப் பரவும் சககுடிமகனின் ஆரோக்கியம் பற்றிய புரிதல் இந்த விலங்குகளுக்கு இல்லை
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
03-டிச-202121:47:11 IST Report Abuse
Nagercoil Suresh ஒமைக்ரான் அதிகம் கெட்டவனா இல்லை டெல்டா பிளஸ் அதிகம் கெட்டவனா என்பதை ஆராய வேண்டும், அதிகம் பரவுதலைவிட இறப்புகள் அதிகம் இருந்தால் டெல்டா பிளஸ் தான் அதிகம் கெட்டவன்..இந்தியாவில் எத்தனை நாட்களுக்கு தான் ஒமைக்ரானியர்களை விரட்டி பிடிக்கப்போறாங்களோ...விரட்டி பிடிப்பதை விட பூஸ்டர் டோஸ் பலனளிக்கும்...
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
03-டிச-202121:24:50 IST Report Abuse
Tamilan எதோ தெருவில் சிறுபிள்ளைகள் தொட்டு பிடிச்சு விளையாடுவதுபோல் உள்ளது விஞ்சான உலகின் அரசியல் சட்ட அரசுகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X