பண பரிமாற்றத்தில் மாற்றம் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Updated : டிச 05, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி:''தொழில்நுட்ப வளர்ச்சியால் நாட்டில் பண பரிமாற்றத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.'பின்டெக்' எனப்படும் நிதி தொழில்நுட்பம் தொடர்பான 'இன்பினிட்டி' அமைப்பை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:நாட்டில் பண பரிமாற்றத்தில் தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண பரிமாற்றம், பிரதமர் நரேந்திர , மோடி பேச்சு

புதுடில்லி:''தொழில்நுட்ப வளர்ச்சியால் நாட்டில் பண பரிமாற்றத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.'பின்டெக்' எனப்படும் நிதி தொழில்நுட்பம் தொடர்பான 'இன்பினிட்டி' அமைப்பை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டில் பண பரிமாற்றத்தில் தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


டிஜிட்டல் வங்கி

ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதை விட, மொபைல் போன் வழியாக பணம் அனுப்புவது அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் முழுமையான டிஜிட்டல் வங்கி செயல்படுவது உறுதியாகி உள்ளது. இன்னும் 10 ஆண்டுகளுக்குள் முழுமையான டிஜிட்டல் வங்கியை நாம் பார்க்கலாம். நம் பண பரிமாற்றமும் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. பண்டமாற்று முறையிலிருந்து உலோகம், நாணயத்திலிருந்து ரூபாய் நோட்டுகள், காசோலையிலிருந்து அட்டைகள் என பரிமாற்றம் அடைந்து, தற்போது டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு வந்துஉள்ளோம். புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதில் எந்த நாட்டுக்கும் பின்தங்கியதில்லை இந்தியா.

நாட்டில் 50சதவீதத்துக்கும் குறைவான மக்களுக்கு மட்டுமே 2014க்கு முன் வரை வங்கி கணக்கு இருந்தது. கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசு செயல்படுத்திய 'ஜன்தன்' திட்டத்தால், புதிதாக ௪௩ கோடிக்கும் அதிகமானோருக்கு வங்கி கணக்கு துவக்கப் பட்டுள்ளது.


நம்பிக்கை

மேலும், 69 கோடி 'ரூ பே' கார்டுகள் வழியாக 130 கோடிக்கும் அதிகமான பண பரிமாற்றங்கள் கடந்த ஆண்டு நடந்துள்னன.நிதி தொழில்நுட்பத்தில் நம்பிக்கை மிகவும் முக்கியம். மக்களின் நலன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பது தான் நம்பிக்கை. மோசடிக்கு இடம் அளிக்காத வகையில் நிதி தொழில்நுட்பங்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
04-டிச-202110:29:36 IST Report Abuse
பாமரன் ///...நாட்டில் 50சதவீதத்துக்கும் குறைவான மக்களுக்கு மட்டுமே 2014க்கு முன் வரை வங்கி கணக்கு இருந்தது. கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசு செயல்படுத்திய 'ஜன்தன்' திட்டத்தால், புதிதாக ௪௩ கோடிக்கும் அதிகமானோருக்கு வங்கி கணக்கு துவக்கப் பட்டுள்ளது....///... இவருக்கு தேர்தல் வந்துட்டா எங்க மைக் கிடைச்சாலும் அரசியல் தான்...🤭🤭 அது சரி.. போன வாரம் இந்தியர்கள் பத்து கோடிக்கும் மேலாக வங்கி கணக்குகளை ஆபரேட் செய்யாமல் வச்சிருக்கிறதா ஒரு நியூஸ் வந்துச்சே.... அதை மைனஸ் பண்ணியாச்சா இல்லையா...🙄
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
04-டிச-202110:19:34 IST Report Abuse
Sampath Kumar என்ன மாற்றம் ஜி கேஷ் லேஸ் எகானமி என்று ஒரு புருடா வை போல இப்ப என்ன து பிட் காய்ன்னா ?? விளங்கிப்பினும்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-டிச-202108:38:42 IST Report Abuse
Kasimani Baskaran அருமை. மாதம் 2% என்று கொள்ளையடிக்கும் விசா, மாஸ்டர் கார்டு போன்ற கிரடிட்கார்டு நிறுவனங்கள் அலறுகிறார்கள். இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X