'ஒமைக்ரான்' பாதிப்பிலிருந்து தப்பிக்க தடுப்பூசி தான் ஆயுதம்: மத்திய அரசு

Updated : டிச 05, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (15)
Advertisement
புதுடில்லி : 'ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து தப்பிக்க இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் ஒரே வழி' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருவர் இந்த வைரசால்
ஒமைக்ரான்'   தடுப்பூசி , ஆயுதம்: மத்திய அரசு

புதுடில்லி : 'ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து தப்பிக்க இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் ஒரே வழி' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருவர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலை தொடர்பாளர்கள், இரண்டாம்- நிலை தொடர்பாளர்கள் என, ௫௦௦க்கும் அதிகமானோர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுஉள்ளனர்.
இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் ஒமைக்ரான் இந்தியாவில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும். ஏனெனில், 'டெல்டா' வைரசால் பலரும் பாதிக்கப்பட்டு இப்போது மீண்டுவிட்டனர்.
மேலும் நாட்டில் தடுப்பூசி போடும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒமைக்ரான் பாதிப்பு இந்தியாவில் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ்களை எதிர்த்து போராடுவதில் முக்கிய ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தவறாமல் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அது ஒன்று தான், ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து தப்பிக்க உள்ள ஒரே வழி. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து லோக்சபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:ஒமைக்ரான் பரவல் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வந்த ௧௬ ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ௧௮ பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனரா என்பதை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவின் எந்த சவாலையும் எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. மாநிலங்களுக்கு தேவையான மருந்துகள், தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.நம் விஞ்ஞானிகளை நம்ப வேண்டும். அவர்கள் ஆலோசனையை பெற்று, ௧௮ வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது பற்றி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
04-டிச-202121:46:44 IST Report Abuse
J.Isaac மக்கள் மத்தியில் பயத்தை உண்டாக்கி எளிதான முறையில் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க உலகின் சில நாடுகளின் துணையோடு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் ரகசிய திட்டம் போல தெரிகிறது.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
04-டிச-202117:54:37 IST Report Abuse
Tamilan டெல்டாவால் பாதிக்கப்பட்ட்டர்கல் , தடுப்பூசி போட்டுக்கொன்றகள் , அதனால் வராது .இதனால் பயம் வேண்டாம் . கதை எழுதுவதில் அரசியல் சட்டத்தில் உள்ளவர்கள் திறமைசாலிகள் . அதிலும் படித்தவர்கள் விஞ்சானிகள் மிகவும் தலை சிறந்தவர்கள் .
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
04-டிச-202117:52:00 IST Report Abuse
Tamilan ஒமைக்ரான் ஆயுத்தை எப்படி தடிக்கப்போகிறார்கள் ?. தடுப்பூசியை வைத்து அதன் பாதிப்பைத்தான் கட்டுப்படுத்துகிறார்கள் . புண் பட்ட மனதை புகை விட்டு ஆத்துவதைப்போன்றது, இவர்கள் மனிதர்களை விலங்குகள் என்று நினைத்தார்களோ ? அல்லது கல் என்று பாவிக்கிறார்களா ?. மாதம் ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்ளவேடனுமா அல்லது வருடம் ஒரு முறையா அல்லது தினமும் தீர்த்தம் குடிப்பதைப்போல் குடித்துக்கொள்ளவேண்டிடுமா?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X