பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசின் புதிய மின் திட்டம் : ரூ.20 ஆயிரம் கோடி கேட்க முடிவு

Updated : டிச 05, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை:மத்திய அரசின், 'ரிவேம்ப்டு டிஸ்ட்ரிபியுஷன் செக்டார் ஸ்கீம்' என்ற புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்ட பணிகளை, தமிழகத்தில் செயல்படுத்த, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கேட்க, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.மத்திய அரசு, நாடு முழுதும் தடையில்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும், மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும், மின்சாரம் விற்பனையை துல்லியமாக
மத்திய அரசு, புதிய மின் திட்டம் : ரூ.20 ஆயிரம் கோடி ,

சென்னை:மத்திய அரசின், 'ரிவேம்ப்டு டிஸ்ட்ரிபியுஷன் செக்டார் ஸ்கீம்' என்ற புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்ட பணிகளை, தமிழகத்தில் செயல்படுத்த, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கேட்க, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு, நாடு முழுதும் தடையில்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும், மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும், மின்சாரம் விற்பனையை துல்லியமாக கண்டறியவும், புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.
இரு பிரிவுகளை உள்ளடக்கிய, 3.03 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தை, 2025 - 26ல் முடிக்க 'கெடு' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவின் கீழ், புதிய துணைமின் நிலையம், மின் வழித்தடம் அமைத்தல், மின் வழித்தடங்களில் மீட்டர் பொருத்துதல், மின் இணைப்பு களில், 'ஸ்மார்ட், ப்ரீபெய்டு' மீட்டர் பொருத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.
இரண்டாவது பிரிவில் ஊழியர்களுக்கு பயிற்சி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் செயல்படுத்தப்படும்.இதுதொடர்பாக, தமிழக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதுப்பிக்கப்பட்ட மின் திட்ட பணிக்கான நிதியை, மத்திய அரசு வழங்கும். இதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள்; செலவு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கையை, இம்மாதத்திற்குள் தமிழக மின்வாரியம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மத்திய அரசு நிர்ணயித்துள்ள கால அவகாசத்திற்குள் திட்ட பணிகளை முடித்து விட்டால், திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் நிதியில், 60 சதவீதம் மானியமாக கிடைக்கும். எனவே, தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்த, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கேட்கும் வகையில், விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது. அறிக்கை விரைவில், மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
04-டிச-202122:10:18 IST Report Abuse
sankaseshan Miller ஏர் இந்தியாவை சீரழித்தது பிரபுல் படேல் மந்திரி NCP கட்சி UPA கூட்டணி மந்திரி ஷரத் பவார் கூட்டாளி
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
04-டிச-202118:22:53 IST Report Abuse
M S RAGHUNATHAN என் பக்கத்து வீட்டில் மீட்டர் எரிந்து விட்டது. வீட்டுக் காரர் ஆகஸ்ட் மாதம் மின் வாரியத்திடம் புகார் கொடுத்து புது மீட்டர் பொருத்துவதற்கு பணமும் செலுத்தி கிட்ட தட்ட 4 மாதங்கள் ஆகி விட்டது. இன்னமும் புது மீட்டர் பொருத்தப் படவில்லை. கேட்டால் மீட்டர் கைவசம் இல்லை, வந்தவுடன் மாற்றுகிறேன் என்கிறார்கள். தனியாக speed money அதுதாங்க லஞ்சமும் கொடுத்து ஆகிவிட்டது ஆனால் மீட்டர் தான் வரக் காணோம். ஒரு நாள் தாமதமாக பணம் செலுத்தினால் fuse ஐ பிடுங்கி அபராதம் வசூலிக்கும் TNEB இதற்கு என்ன பதில் சொல்லும். மின்சார மந்திரிக்கு கோவையில் தான் வேலை. கோட்டையில் இல்லை போலும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
04-டிச-202114:45:36 IST Report Abuse
raja கேள்றா...கேள்றா... யாருகிட்ட கேக்குறா அன்னன் கிட்ட தானே...அப்புறம் கையரிப்பு நோயால் ஆசுபத்திரில படுத்துகிட்டு இருக்கிற உடன்பிறப்புக்கு கறியும் மீனும் ஆக்கிபோட்டாத்தானே உடம்பு தேறும்...அதுக்கும் சேர்த்து கேளு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X