அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அடுத்த முறை மழை பாதிப்பு கூடாது' : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Updated : டிச 05, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (26+ 25)
Share
Advertisement
சென்னை ''மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் அடுத்த முறை நடக்காமல், தமிழகம் தடுத்துவிட்டது என்ற பெயரை, நாம் எடுத்தாக வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னையில் வெள்ளப் பெருக்கை தணித்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். பேரிடர்கூட்டத்தில் அவர் பேசியதாவது:இயற்கையின் கொடையை
அடுத்த முறை மழை, பாதிப்பு கூடாது :  ஸ்டாலின் உத்தரவு

சென்னை ''மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் அடுத்த முறை நடக்காமல், தமிழகம் தடுத்துவிட்டது என்ற பெயரை, நாம் எடுத்தாக வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின்
தெரிவித்தார்.

சென்னையில் வெள்ளப் பெருக்கை தணித்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
பேரிடர்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இயற்கையின் கொடையை நாம் தடுக்க முடியாது. ஆனால், அதை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக, நாம் மாற வேண்டும். ஆட்சிக்கு வந்த போது, கொரோனா தொற்று மிரட்டிக் கொண்டிருந்தது. அதை கட்டுப்படுத்தி இருக்கிறோம். இப்போது, 'ஒமைக்ரான்' தொற்று மிரட்ட துவங்கி உள்ளது. இதற்கு மத்தியில், மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பேரிடர்கள் வந்தாலும், அனைத்தையும் வெல்லக்கூடிய திறன் படைத்ததாக, தமிழக அரசு நிர்வாகம் உள்ளது. பேரிடர் தடுப்பு பணிகள் என்பது, பேரிடர் காலங்களில் மக்களை காப்பது மட்டுமின்றி; அத்தகைய பேரிடர் ஏற்படாத சூழலை உருவாக்குவதும் மிகவும் முக்கியம்.இந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்து, சென்னையை வெள்ள நீர் சூழாமல் தவிர்க்கவும், தடுக்கவும், பெருநகர வெள்ள நீர் குழுவை அமைத்துள்ளோம்.


நிரந்தர தீர்வு



நம் கண் முன்னே மழை ஏற்படுத்தி உள்ள பாதிப்புகள், இன்னொரு முறை நடக்காமல், நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். சென்னை மற்றும் புறநகரில், எத்தகைய பெருமழையையும் எதிர்கொள்ள தேவையான, உடனடியாக செயல்படுத்த வேண்டிய விரிவான திட்டங்களை, அரசுக்கு குழு வழங்க வேண்டும்.சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உட்பட சென்னை வடிநில பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய, நீண்ட கால திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.வெள்ளத் தடுப்பு மட்டுமல்லாமல், நீர் மேலாண்மைக்கான சிறந்த செயல் திட்டம் குறித்தும், நீங்கள் திட்டம் தீட்டி, பகுதி வாரியாகவும், துறை வாரியாகவும் வழங்க வேண்டும். இவை அனைத்தையும் உடனடியாக செய்தாக வேண்டும். எனவே, திட்டங்களை தீட்டவே பல மாதங்கள் எடுத்து கொள்ளக் கூடாது.


திட்ட அறிக்கை



எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக அறிக்கை கொடுக்க வேண்டும். திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்திக் காட்டுவோம்.கடந்த காலங்களில், மழை நீர் அதிகம் தேங்கி, மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து, அவ்விடங்களில் மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கூடுதல் கவனம் செலுத்தி, பாதிப்பை தடுப்பதற்கான உரிய வழிமுறைகளை கையாள வேண்டும்.வரும் காலங்களில், சென்னை மட்டுமின்றி, தமிழகம் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலமாக திகழ, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளை, அடுத்த முறை நடக்காமல், தமிழகம் தடுத்து விட்டது என்ற பெயரை, நாம் எடுத்தாக வேண்டும். எனவே, திட்ட அறிக்கையை விரைவாக தாருங்கள்; நடைமுறைக்கு சாத்தியம் உள்ள திட்டங்களை தாருங்கள்.இவ்வாறு முதல்வர் பேசினார்.கூட்டத்தில், அமைச்சர்கள் நேரு, வேலு, ராமச்சந்திரன், தலைமை செயலர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


குழு விரிவாக்கம்



சென்னை பெருநகர வெள்ளப்பெருக்கு தணித்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் 11 பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.புதிதாக குழு உறுப்பினர்களாக சுற்றுச்சூழல் இயக்குனர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை வரைவாளர், நகர் மற்றும் ஊரமைப்பு தலைமை வரைவாளர், சென்னை மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர், நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர், தேசிய தொலை உணர்வு மைய இயக்குனர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் துணைக்குழு அமைத்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26+ 25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
06-டிச-202113:50:44 IST Report Abuse
bal இந்த விடியல் மன்னன் இந்த முறை என்ன கிழித்தார்...வாய் சொல்லில் வீரநடை...
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
05-டிச-202100:07:12 IST Report Abuse
anbu மழைக்கு எச்சரிக்கை விடும் விடியாத மடியல். Rain rain go away. Don't come again another day.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
04-டிச-202122:08:39 IST Report Abuse
Sankar Ramu அப்படி ஓரமாய் போய் விளையாடுங்கப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X