பேசுவதற்கு பதில் வாசித்தால் குறிப்பில் ஏறாது: வைகோவுக்கு வெங்கையா நாயுடு கண்டிப்பு!

Updated : டிச 05, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
''பேசுவதற்கு பதிலாக வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்; விதிகளின்படி இது பொருந்தாது. நீங்கள் பேசும் எதுவுமே, சபைக்குறிப்புகளில் ஏறாது,'' என ம.தி.மு.க., - எம்.பி., வைகோவை, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்ததால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது. கோரிக்கைராஜ்யசபாவில் நேற்று ம.தி.மு.க., - எம்.பி., வைகோ பேசியதாவது:தென் மாநில எம்.பி.,க்களுக்கு வரும், மத்திய அரசின் அனைத்து
வைகோ, வெங்கையா நாயுடு, கண்டிப்பு!

''பேசுவதற்கு பதிலாக வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்; விதிகளின்படி இது பொருந்தாது. நீங்கள் பேசும் எதுவுமே, சபைக்குறிப்புகளில் ஏறாது,'' என ம.தி.மு.க., - எம்.பி., வைகோவை, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்ததால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது.


கோரிக்கை



ராஜ்யசபாவில் நேற்று ம.தி.மு.க., - எம்.பி., வைகோ பேசியதாவது:தென் மாநில எம்.பி.,க்களுக்கு வரும், மத்திய அரசின் அனைத்து கடித போக்குவரத்துகளும் ஹிந்தியில் தான் உள்ளன.
ஹிந்தி பேசாத மாநிலங்களின் மீதான மத்திய அரசின் ஆதிக்கத்தை இது காட்டுகிறது.
மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்கள் என எல்லாமே, ஹிந்தியில் மட்டுமே இருப்பதால் ஒன்றுமே புரிவதில்லை. இதற்காக கோடிக்கணக்கில் வரிப்பணத்தை மத்திய அரசு செலவழிக்கிறது.ஆங்கிலத்தை பின்தள்ளும் போக்கை ஏற்க முடியாது. அனைத்து மாநில மொழிகளையும், மத்திய அரசின் நிர்வாக நடைமுறைகளில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வருகிறது.இவ்வாறு வைகோ பேசினார்.

அப்போது தன் கையில் வைத்திருந்த குறிப்புகளை பார்த்து பேசிக் கொண்டிருக்கும் போது, சபை தலைவர் வெங்கையா நாயுடு இடைமறித்து கூறியதாவது:நீங்கள் சொல்ல வந்ததை சொல்லி விட்டீர்கள்; போதுமானது. நீங்கள் பேசுவதற்கு பதிலாக வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.விதிகளின்படி இது பொருந்தாது. நீங்கள் பேசும் எதுவுமே, சபைக்குறிப்புகளில் ஏறாது. இதையும் உங்களது வசதிக்காக ஆங்கிலத்திலேயே குறிப்பிடுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


பரபரப்பு



உடனே, வைகோ குறிப்புகள் இல்லாமலேயே பேசத் துவங்கினார். அப்போதும் அனுமதி மறுக்கப்பட்டது. வைகோ தொடர்ந்து பேச முற்படவே வெங்கையா நாயுடு குறுக்கிட்டு, ''இந்திய மொழிகளில் எதையும் திணிக்கவும் கூடாது. ஒடுக்கவும் கூடாது; ஒவ்வொரு மொழியையும் ஊக்குவிக்க வேண்டும்,'' என்று கூறிவிட்டு அடுத்தஎம்.பி.,யை பேச அழைத்தார்.இதை ஏற்காமல் கோபமடைந்த வைகோ, ''என்னை பேச அனுமதிக்க வேண்டும். என் வாய்ப்பை தடுக்க வேண்டாம்,'' என்று கூறி கடுமையாக வாதிட்டார். அப்போது வெங்கையா நாயுடு, ''நீங்கள் ஒரு மூத்த எம்.பி., சபை அலுவல்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்று கூறி மறுத்து விட்டார். இதனால், சில நிமிடங்கள் சபையில் பரபரப்பு நிலவியது.- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
08-டிச-202113:38:09 IST Report Abuse
Sathish இது ஒன்னு போதுமே. அவர் ராஜ்யசபா MP பதவிக்கு கூட லாயக்கில்லை என்று புரிந்து கொள்ள.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
07-டிச-202117:02:52 IST Report Abuse
jayvee தமிழகத்தின் முதல் கிருத்துவ கட்சி மதிமுக ..போட்டி போடும் கட்சி திமுக
Rate this:
Cancel
Ramshanmugam Iyappan - Tiruvarur,கத்தார்
07-டிச-202116:06:17 IST Report Abuse
Ramshanmugam Iyappan வெங்கய்யாவின் கூற்று ஏற்புடையது அல்ல, சொல்லவந்த தகவல் தவறு நேராமல் இருக்க, சரியான தகவலை பார்த்து பேசுவது சாலா சிறந்ததே, சட்டத்தில் இடம் இல்லை, மரபு இல்லை என்றால் அதை மாற்றியமைக்க சட்டதிருத்தம் தேவைப்பட்டால் கொண்டுவருவது மிக அவசியம். வெங்கய்யா சூழ்நிலை அறிந்து நேர்த்தியாக செயல்படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X