அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தமிழகம் உருப்பட வாய்ப்பு உண்டா?

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (123)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.கணேசன், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சாதாரண குடும்பஸ்தனே, கடன் வாங்க வேண்டும் என்றால், ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பான். ஆனால், ஒரே ஒரு 'கேட்டகரி' மட்டும், யோசிக்காமல் கடன் வாங்கும். அது... குடிகாரன்!குடித்துக் குடித்து, தன் அபிலாஷையைச் சொறிந்து கொள்ள
உலக வங்கி கடன், தமிழக அரசு,  இலவச திட்டங்கள், திவால், வெளிநாடு செட்டில், திமுக, அதிமுக, திராவிட கட்சிகள்,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:latest tamil news


ஆர்.கணேசன், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சாதாரண குடும்பஸ்தனே, கடன் வாங்க வேண்டும் என்றால், ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பான். ஆனால், ஒரே ஒரு 'கேட்டகரி' மட்டும், யோசிக்காமல் கடன் வாங்கும். அது... குடிகாரன்!

குடித்துக் குடித்து, தன் அபிலாஷையைச் சொறிந்து கொள்ள கடன் வாங்குவான். திருப்பிக் கொடுக்க வேண்டும் என, கனவிலும் நினைக்க மாட்டான். இதே மனோபாவத்தை தான், தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.க.,வும் கொண்டிருக்கிறது.


latest tamil news


தமிழகம் ஏற்கனவே, ஏழு லட்சம் கோடிகளுக்கு மேல் கடனில் உழன்று கொண்டிருக்கிறது. கடனை அடைப்பது பற்றி சிந்திக்காமல், பொழுது விடிந்து பொழுது போனால், உலக வங்கியிடம் எந்த திட்டத்தைச் சொல்லி கடன் வாங்கலாம், அதில் எவ்வளவு விழுக்காடு சுருட்டலாம் என்ற சிந்தனையில் ஆளுங்கட்சிஇருக்கிறது.

ஆயிரம் பொய் என்ற திரைப்படத்திற்காக கவிஞர் வாலி ஒரு பாட்டு எழுதி இருப்பார்.'புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே! பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே! பழகும் வேஷமும் பொய்யே பொய்யே! காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே!' என்பது தான் அந்த பாடல்.


latest tamil news


அந்த பாடலின் வரிகளை மாற்றி பின்வருமாறு பாடி ஆறுதல் அடைய வேண்டியதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை...'கழகம் சொன்னதும் பொய்யே பொய்யே! ஸ்டாலின் சொன்னதும் பொய்யே பொய்யே!'கரப்ஷன்' ஒன்று தான் மெய்யே மெய்யே!' வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் கடன் வாங்கி, குறிப்பிட்ட கால கெடுவுக்குள் திருப்பித் தராவிட்டால், வாங்கிய கடனுக்கு ஈடாக வைத்த பொருளை ஜப்தி செய்து விடுவர்.

உலக வங்கியிடம் மேலும் மேலும் கடன் வாங்கினால், 'நீங்கள் வாங்கிய கடனுக்கு தமிழகம் ஈடாகி விட்டது. இடத்தை நீங்கள் காலி செய்யுங்கள்' என உலக வங்கி சொல்லி விட்டால், ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வினர் இடத்தைக் காலி செய்து, வெளிநாட்டில், 'செட்டில்' ஆகி விடுவர். உடல் நலக்குறைவு ஏற்பட்டால், வெளிநாட்டு சிகிச்சை எடுப்பது, இப்பேற்பட்ட 'தொலைநோக்கு' திட்டத்தோடு தான் என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் சென்று விட்டால், நம் கதி? இன்றைக்கு பொங்கல் பரிசாகவும், எரிவாயு சிலிண்டருக்காகவும், இன்னபிற இலவசங்களுக்காகவும் வாங்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை நாம் திருப்பி கட்ட வேண்டி இருக்கும்.இலவசங்களுக்கு ஆலாய் பறக்கும் நம் சகோதர சகோதரிகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்! இக்கடிதத்தின் தலைப்புக்கான அர்த்தம் இப்போது புரிந்திருக்குமே?

Advertisement
வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopalakrishnan Thyagarajan - Kuwait City,லிபியா
09-டிச-202115:22:58 IST Report Abuse
Gopalakrishnan Thyagarajan கழகங்கள் ஆட்சி வரை உருப்பட வழி இல்லை
Rate this:
Cancel
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
05-டிச-202115:13:51 IST Report Abuse
Dinesh Pandian மக்கள் பெட்ரோல் மீது வாட் வரி அதிகம் செலுத்த தயார் ஆகவேண்டும்
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
04-டிச-202121:50:33 IST Report Abuse
Tamilan வாய்மையே வெல்லும், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே, நீதி வெல்லும், உண்மையின் உறைகல், அகிம்சையே பேராயுதம் என்பதையெல்லாம் விஞ்சான உலகிலிருந்து நீக்கி விட்டு, திரைகடலோடியும் திரவியம் தேடு, கூட்டத்தோடு கூட்டமாக கும்மாளம் போடலாம் அதுதான் உலகமயமாக்கல். கூண்டொடு கைலாசம் போகலாம், தற்பெருமை கணக்கில்லாதது, விலைமதிப்பில்லாதது, பூனையை யானையாக magic பூச்சாண்டி காட்டுவதே பொருளாதார கூற்று, சூதாட்டம் பொருளாதாரத்தின் ஊற்று, லச்சம் கோடிகளை கோடி கோடிகல் என்று பறைசாற்று, பின் பொதுநல செயல்களுக்கு காசில்லை என்று அலை, திரைகடலோடியும் ஆயுதம் வாங்கு, விற்று பணம் சேர், கோடி கோடி பொருளாதாரமே என்று பிரச்சாரம் செய்து கொண்டு லச்சம் கோடிக்கு ஆயுதம் வாங்கு. அதனால் உலகமே சுபிட்சம் பெரும் என எத்தனையோ பொன்மொழிகளை உபயோகிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X