பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கு 'ஒமைக்ரான்' பாதிப்பா?

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை :வெளிநாடுகளில் இருந்து வந்த மூன்று பேருக்கு, 'ரேபிட்' பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு, 'ஒமைக்ரான்' பாதிப்பு உள்ளதா என கண்டறிய, அவர்களது மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.தென்ஆப்ரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட, 'ஒமைக்ரான்' கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை
வெளிநாடு.3 பேருக்கு 'ஒமைக்ரான்' பாதிப்பா?

சென்னை :வெளிநாடுகளில் இருந்து வந்த மூன்று பேருக்கு, 'ரேபிட்' பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு, 'ஒமைக்ரான்' பாதிப்பு உள்ளதா என கண்டறிய, அவர்களது மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
தென்ஆப்ரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட, 'ஒமைக்ரான்' கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு, சென்னை, மதுரை, கோவை, திருச்சி சர்வதேச விமான நிலையங்களில், கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது.


latest tamil news


லண்டனில் இருந்து நேற்று முன்தினம் வந்த, 10 வயது சிறுமி மற்றும் ஒரு பெண்ணுக்கு, சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ரேபிட் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து, அவர்களுடன் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஆறு பேர், கிண்டி கிங் கொரோனா அரசு மருத்துவமனை வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
பாதிப்பு கண்டறியப்பட்ட இரண்டு பேர் உட்பட எட்டு பேருக்கும், உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என கண்டறிய, அவர்களது மாதிரிகள், மரபணு பகுப்பாய்வு பரிசசோதனைக்கு டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு முடிவுகள் வர ஒரு வாரமாகலாம் என்பதால், அதுவரை எட்டு பேரும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர்.
அதேபோல, சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த, 56 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது மாதிரி, பெங்களூரில் உள்ள ஆய்வகத்திற்கு, மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 1,868 பேரில், மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுடன் ஒன்பது பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா என அறிய, மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒமைக்ரான் குறித்து அச்சப்பட தேவையில்லை. மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். இது, டெல்டா வைரசை விட வேகமாக பரவக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தேவையற்ற பீதியை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
04-டிச-202100:24:14 IST Report Abuse
Vena Suna இப்போ தான் கொஞ்சம் தேறி வருகிறோம். வெளி நாட்டு ஆளுங்க மூலமா கண்டதை நம்ம நாட்டுக்குள்ள விட்டுராதீங்க...சமயோஜித பிடதி இருந்தா போதும் புரிஞ்சிக்க. நம்ம நாடு தாங்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X