பொது செய்தி

தமிழ்நாடு

'பொறுமை காத்தால் பெருமை சேரும்'

Added : டிச 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:''பொறுமை காப்பவர்களிடம் எப்போதும் பெருமை வந்து சேரும்,'' என, ஆன்மிக சொற்பொழிவாளர் ரவிக்குமார் பேசினார்.திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீஐயப்பன் கோவிலில், 62வது மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம், இரவு, 'அடிகள் காட்டிய அடியவர்கள்' என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் ரவிக்குமார் பேசியதாவது:தெய்வ சன்னதியில், இறைவனின் பெருமையை
 'பொறுமை காத்தால் பெருமை சேரும்'

திருப்பூர்:''பொறுமை காப்பவர்களிடம் எப்போதும் பெருமை வந்து சேரும்,'' என, ஆன்மிக சொற்பொழிவாளர் ரவிக்குமார் பேசினார்.திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீஐயப்பன் கோவிலில், 62வது மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம், இரவு, 'அடிகள் காட்டிய அடியவர்கள்' என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் ரவிக்குமார் பேசியதாவது:தெய்வ சன்னதியில், இறைவனின் பெருமையை பேசுவதும், கேட்பதும் புண்ணியம். இதனால், மனிதப்பிறவியின் மகத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.இறைபக்தியானது, இரு வகைப்படுகிறது, குட்டியை கவ்விச்செல்லும் பூனையை போன்ற, இறைவனால் ஆட்கொள்ளப்படும் பக்தி; குரங்கை தாவி பற்றிக்கொள்ளும் குட்டியை போன்ற, இறைவனை விடாமல் பற்றிக்கொள்ளும் பக்தி.நமது செயல்கள் பிறருக்கு தெரியாது என்று யாரும் நினைத்துவிடாதீர்கள். பஞ்சபூதங்கள், சூரியன், சந்திரன், மனது மற்றும் காலம் என்ற ஒன்பது பேர், நம்மை கவனிக்கின்றனர் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும். பொறுமை காப்பவர்களிடம் எப்போதும் பெருமை வந்து சேரும்.இம்மைக்கும், மறுமைக்கும் மோட்ச வழிகாட்டுவது இறைநாமம் மட்டுமே. நமக்கு எவ்வளவு பெரிய சோதனை வந்தாலும், இஷ்ட தெய்வத்தை இடைவிடாது, பக்தியுடன் ஜெபித்தால் தெளிவு பிறக்கும். அசையாத நம்பிக்கையுள்ள பக்தர்கள், இறைவனை சென்றடைவர்.நான்மறை கற்றவன் ஞானியல்ல; நான் என்ற எண்ணம் மறைய கற்றவரே ஞானி என, ஆதிசங்கரர் கூறியுள்ளார்.அதன்படி, அகந்தையை மறந்து, இறைவனின் திருவடியை சென்றடைய வேண்டும். இறைவன் முன் அனைவரும் சமம். அவன் நம்மை பிடிக்கும் முன், நாம் பிடித்து கொள்ள வேண்டும். இறைபக்தியே, நல்லொழுக்கத்தை மேம்படுத்தி, வாழ்வை வளமாக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X