உணர்வற்ற பிரதமர் : ராகுல் குற்றச்சாட்டு

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (37+ 17)
Share
Advertisement
புதுடில்லி: போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உணர்வின்றி, ஆணவத்துடன் நடந்து கொள்வதாக காங்., - எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டி உள்ளார்.காங்., முன்னாள் தலைவர் ராகுல் நேற்று கூறியதாவது:புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது தன் தவறு தான் என ஒப்புக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பும் கோரி
 உணர்வற்ற பிரதமர் :  ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உணர்வின்றி, ஆணவத்துடன் நடந்து கொள்வதாக காங்., - எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டி உள்ளார்.

காங்., முன்னாள் தலைவர் ராகுல் நேற்று கூறியதாவது:புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது தன் தவறு தான் என ஒப்புக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பும் கோரி உள்ளார். எனவே போராட்டத்தின் போது விவசாயிகள் உயிரிழந்ததற்கு அவர் தான் பொறுப்பு.
அப்படி இருக்கையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் கண்ணியமும், மனிதாபிமானமும் பிரதமரிடம் ஏன் இல்லை?


latest tamil news



உயிரிழந்த 403 பஞ்சாப் விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயை அம்மாநில அரசு அளித்துள்ளது. 152 பேரின் குடும்பத்தினருக்கு வேலை அளித்துள்ளது.

போராட்டத்தில் உயிரிழந்த 700 விவசாயிகளின் பட்டியலை பார்லி.,யில் தாக்கல் செய்ய உள்ளேன். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரின் வலியை புரிந்து கொள்ளாத அளவுக்கு பிரதமர் உணர்வற்றவராக உள்ளார். இந்த விவகாரத்தை ஆணவத்துடனும், கண்ணியமற்ற கோழைத்தனத்துடனும் அவர் கையாள்கிறார்.இவ்வாறு ராகுல் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (37+ 17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
04-டிச-202113:47:29 IST Report Abuse
Sridhar முதலில், மோடி மன்னிப்பு கேட்டது நாட்டு மக்களிடம் - போராட்டம் என்ற பெயரில் அராஜகம் செய்துவரும் ப்ரோக்கர்களிடம் அல்ல. இதற்க்கு யாரும் சரியான பதிலை உடனே கொடுக்காவிட்டால், 15 லட்சம் கதை போல, பொய்யயே உண்மையாக்க முயலுவார்கள். ஏன் நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்டார்? ஒரு நல்ல சீர்திருத்த நடவடிக்கை - அமல் படுத்தினால், பல சிறு குறு விவசாயிகள் வாழ்வில் பெரிய ஒரு மாற்றம் ஏற்படுத்தலாம், அவர்கள் வாழ்க்கை தரம் உயரும் என்று கொண்டுவந்த சட்டத்திருத்தம் - சொல்லப்போனால் காங்கிரஸ் உட்பட பலகட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த சீர்திருத்தங்கள் இடம் பெற்றுருக்கிற நிலையில், தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கிற சில போராட்டக்காரர்களின் மோசமான தொடர்புகளால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற உளவுத்துறை எச்சரிக்கை அடிப்படையில், அவர்களை ஒப்புக்கொள்ள வைக்கமுடியவில்லையே என்ற வருத்தத்தை தன மன்னிப்பு மூலம் பிரதமர் மக்களிடம் வெளிப்படுத்தினார். ஒருபோதும், போராடும் ப்ரோக்கர் களிடம் மன்னிப்பு கேட்கவில்லை. இந்த சீர்திருத்த சட்டங்கள் தவறு என்று சொல்லவும் இல்லை. நிச்சயமாக வேறு ஒரு வழியில் இச்சட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்பட்டே தீரும். இந்நிலையில், யார் யாரோ எங்கேயோ இறந்ததற்கு,அரசு இழப்பீடு கொடுக்கவேண்டுமாம் இதற்க்கு, நேரிடையாக பஞ்சாப் மக்களுக்கு இலவசம் கொடுங்கள் அப்போதுதான் நாங்கள் தேர்தலில் ஜெயிக்கமுடியும்னு சொல்லிட்டு போகலாமே? பார்க்கப்போனால், இந்த அராஜக போராட்டத்தால், பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு 3000 கோடி ரூபாய் நஷ்டம். அதை இந்த பிஸ்ஸா ப்ரோக்கர்கள் தான் அரசுக்கு செலுத்தி அந்த மக்களுக்கு நஷ்டஈடு செய்யவேண்டும். ராவுல் எப்போவுமே ஒரு டுபாகூர் தான் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-202112:31:06 IST Report Abuse
rajan பாவம் இவங்க மன்மோகன் அப்படி இருந்ததை நினைவு கூறுகிறார். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டிந்த அப்பாவி மனிதர். தயாநிதி போன்றவர்களின் ஆதிக்கத்தை தடுக்க முடியாமல் தவித்த அப்பாவி. அவரை உங்க வீட்டு சேவகன் மாதிரிதானே நடத்தினீர்கள். காட்டும் இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போடும் ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர் அல்ல மோடி ஜி.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
04-டிச-202111:37:33 IST Report Abuse
Anand இவன் கூட்டத்தை அடித்து விரட்டாமல் இன்னும் இந்நாட்டில் விட்டு வைத்து இருப்பதை பார்க்கையில் இவன் கூறுவதும் ஒருவகையில் சரியே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X