கோவையின் ஒரு முக்கிய அடையாளம் மறைகிறது!  காப்பாற்ற போராடுகின்றனர் கிரைண்டர் உற்பத்தியாளர்கள்

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
கோவை: இட்லி, தோசை மாவு தயாரிக்கும் கிரைண்டருக்கான கற்களை எடுக்க கல் குவாரிகளில் தடை விதித்திருப்பதால், அதன் உற்பத்தி அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருப்பதாக, கிரைண்டர் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவையின் கண்டுபிடிப்புகளில் மோனோபிளாக் பம்ப்பும், கிரைண்டரும் உலக பிரசித்தி பெற்றவை. இங்கு தயாரித்து உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

கோவை: இட்லி, தோசை மாவு தயாரிக்கும் கிரைண்டருக்கான கற்களை எடுக்க கல் குவாரிகளில் தடை விதித்திருப்பதால், அதன் உற்பத்தி அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருப்பதாக, கிரைண்டர் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.latest tamil newsகோவையின் கண்டுபிடிப்புகளில் மோனோபிளாக் பம்ப்பும், கிரைண்டரும் உலக பிரசித்தி பெற்றவை. இங்கு தயாரித்து உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது தடைபட்டு நிற்கிறது.கோவையின் தனிச்சிறந்த இத்தயாரிப்புக்கு, மத்திய அரசின் புவிசார் குறியீடும் உள்ளது. கோவையில் 200 க்கும் மேற்பட்ட கிரைண்டர் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.30 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாக 20 ஆயிரம் பேரும் உள்ளனர். ஆண்டுக்கு 600 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.


கற்கள்தான் ஆதாரம்!

கிரைண்டர் தயாரிப்புக்கு அடிப்படை மூலப்பொருள் கற்கள்தான். இவை ஊத்துக்குளி, தேகானி, செட்டிபாளையம், வாரிக்கோட்டை, சிவகிரி பகுதிகளிலுள்ள பாறைகளில் கற்கள் வெட்டி கொண்டு வரப்பட்டு, பல படிநிலைகளுக்கு பின், கிரைண்டராக மாற்றப்படுகிறது.உயர்நீதிமன்ற உத்தரவால், கல்குவாரிகளிலிருந்து கிரைண்டர் தயாரிப்புக்கான கற்கள் வெட்டி எடுக்கப்படுவதில்லை. இதனால், தற்போது இத்தொழில், அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.


latest tamil news
காப்பாற்ற அரசு உதவணும்

இது குறித்து, கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் (கவுமா) கிளஸ்டர் சர்வீசஸ் தலைவர் ராஜா கூறியதாவது:
இட்லி, தோசைக்கான சுவையான மாவு, குறிப்பிட்ட கற்களை கொண்டு அரைத்தால்தான் கிடைக்கும். செங்கற்களுக்கு மாற்று பிளைஏஷ் போல், ஒவ்வொரு பொருளுக்கும் மாற்று கிடைக்கும். ஆனால் கிரைண்டர் கற்களுக்கு மாற்று வேறு இல்லை.கடந்த ஆறு மாதங்களில் ஆங்காங்கே, இருப்பு வைத்திருந்த கற்களை கொண்டு, கிரைண்டர் தயாரித்து வந்தோம். தற்போது கற்கள் இல்லாததால் உற்பத்தி தடைபட்டு நிற்கிறது.
இத்தொழில் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும்.கிரைண்டர் உற்பத்திக்கு மட்டும் தேவையான கற்களை வெட்டி எடுக்க, தமிழக அரசு கோர்ட்டில் அனுமதி பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் இத்தொழில் அழிவிலிருந்து மீள முடியும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலையிழப்பை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கடந்த ஆறு மாதங்களில் ஆங்காங்கே, இருப்பு வைத்திருந்த கற்களை கொண்டு, கிரைண்டர் தயாரித்து வந்தோம். தற்போது கற்கள் இல்லாததால் உற்பத்தி தடைபட்டு நிற்கிறது. இத்தொழில் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும். கிரைண்டர் உற்பத்திக்கு மட்டும் தேவையான கற்களை வெட்டி எடுக்க, தமிழக அரசு கோர்ட்டில் அனுமதி பெற்றுத்தர வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THANGARAJ - CHENNAI,இந்தியா
07-டிச-202113:42:53 IST Report Abuse
THANGARAJ கோவை வெட் கிரைண்டர் தொழில் அமைப்பு ஒரு கல் குவாரியை ஏலத்தில் அரசிடம் இருந்து எடுத்து கொண்டு உங்கள் தொழிலுக்கு மட்டும் பயன் படுத்தலாம், அரசிடமும், நீதி மாற்றத்திடமும் முறையான கோரிக்கை வைத்தால் கண்டிப்பாக தொழில் வளரும்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
05-டிச-202104:11:26 IST Report Abuse
meenakshisundaram நல்ல சான்ஸ் ஸ்டாலினுக்கு -இழந்த கோவை யை பெற உடனே கல் குவாரி காண்ட்ராக்ட் கலை திமுக வினருக்கு கோவையில் வழங்கி வாக்குகளை அள்ளட்டும்
Rate this:
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
04-டிச-202113:09:24 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy They should approach the High Court themselves. If they don't get relief, threaten to shift to Telangana or Andhra where the states are are ready to help industries. These courts were blind when even whole mountains vanished for exporting/ selling black granite as those were controlled by poltical bigwigs. Just travel in the road in the Chittanna vasal Virali malai route, many mountains are missing
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X