இந்தியா

'ஒமைக்ரானை சாதாரணமாக கருத வேண்டாம்!'

Added : டிச 04, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
-'கொரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரானை லேசாக எடுத்துக் கொள்ள வேண் டாம். அது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்' என்பது பற்றி, அமெரிக்காவில் இருக்கும் தொற்றுநோயியல் நிபுணர் கேடலின் ஜெடலினா தொடர்ந்து எழுதி வருகிறார். 424 சதவீதம்அவரது சமீபத்திய பதிவில் கூறியிருப்பதாவது:ஒமைக்ரான் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை வந்து அடைந்து விட்டது. தென் ஆப்ரிக்கா
'ஒமைக்ரானை சாதாரணமாக கருத வேண்டாம்!'

-'கொரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரானை லேசாக எடுத்துக் கொள்ள வேண் டாம். அது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்' என்பது பற்றி, அமெரிக்காவில் இருக்கும் தொற்றுநோயியல் நிபுணர் கேடலின் ஜெடலினா தொடர்ந்து எழுதி வருகிறார்.


424 சதவீதம்அவரது சமீபத்திய பதிவில் கூறியிருப்பதாவது:ஒமைக்ரான் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை வந்து அடைந்து விட்டது. தென் ஆப்ரிக்கா சென்று வந்த நபருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நபர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே வந்துவிட்டார். அதாவது, பயணக் கட்டுப்பாடுகள் ஒமைக்ரான் விஷயத்தில் பெரிய பயனைத் தரப் போவதில்லை. அதற்கு முன்னரே ஒமைக்ரான் பரவ ஆரம்பித்து
விட்டது என்பது தான் உண்மை.

எவ்வளவு துாரம் பரவும் என்பதற்கான ஒரு மாதிரியை டாக்டர் டிக் பிராக்மன் என்பவர் உருவாக்கி இருக்கிறார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், உலக நாடுகளின் விமானத் துறை பயண தரவுகளை அடிப்படையாக கொண்டது இந்த ஆய்வு. இதன்படி, தென் ஆப்ரிக்கா அல்லது போஸ்ட்வானாவில் இருந்து இன்னொரு நாட்டுக்கு பயணம் மேற்கொண் டவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு
உள்ளது. இதன்படி, முதல் இரண்டு இடங்களில் ஜிம்பாப்வேயும், அமெரிக்காவும் உள்ளது. அதாவது, தென் ஆப்ரிக்கா, போஸ்ட்வானாவில் இருந்து பயணம் செய்த 1,000 பேரில், 34 பேர், அமெரிக்கா வந்து இறங்குவர்.


latest tamil newsஇந்தப் பட்டியலில், இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. தென் ஆப்ரிக்கா, போஸ்ட்வானாவில் இருந்து பயணம் செய்யும் 1,000 பேரில், 13 பேர் இந்தியா வந்து இறங்குவர்.ஒமைக்ரானின் மையமாக இருப்பது, தென் ஆப்ரிக்காவின் கவுதெங் மாகாணம். டிச., 2ல் மட்டும் அங்கே 6,168 பேர் புதிய ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏழு நாள் சராசரி அளவு 424 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது, நோய் தொற்று இரட்டிப்பாவதற்கு 3.5 முதல் 5
நாட்களே போதும். டெல்டா வகை கொரோனா, இரட்டிப்பாவதற்கு 11 நாட்கள் தேவைப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 'டெஸ்ட் பாசிட்டிவிட்டி' விகிதம் 9 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக கவுதெங் மாகாணத்தில் உயர்ந்து உள்ளது.


பரிசோதனைகவுதெங்கில் பரிசோதனை அதிகமாகியுள்ளது என்று இதற்கு அர்த்தமில்லை. ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது என்றே அர்த்தம்.ஒருத்தருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டால், எத்தனை பேருக்கு அது பரவும் என்பதை கணிப்பது 'ஆர் பேக்டர்' என்பதாகும். இதன்படி பல்வேறு கணிப்புகள் வெளியாகி வருகின்றன.கவுதெங் மாகாணத்தில் மட்டும், டெல்டா வகை கொரோனாவின் கடைசி கட்டத்தில் பரவல் 0.8 ஆக இருந்தது. அது தற்போது 2.33 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது, டெல்டாவைவிட ஒமைக்ரான் மூன்று மடங்கு அதிக மாகியுள்ளது என்று அர்த்தம். அமெரிக்காவில் ஒமைக்ரான் வந்தது ஆச்சரியமில்லை. தொற்றுநோயியல் நிபுணர்கள் தொடர்ந்து வெளியிட்டு வரும் ஆய்வு முடிவுகளைப் பார்க்கும்போது, ஒமைக்ரான் வகை
சாதாரணமானதாக தெரியவில்லை. கவனமாக இருந்து, பாதிப்பையும் பரவலையும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.இவ்வாறு டாக்டர் கேடலின் ஜெடலினா தெரிவித்துள்ளார்.
-- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
04-டிச-202113:57:33 IST Report Abuse
Sridhar பரவுது சரி, ஆனா, தொற்று ஒன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறார்களே? விஷயம் ஒன்றும் தெரியாத நிலையில், எல்லோரும் நிபுணர்களை போல் செய்தி சொல்வதுதான் கொரோனாவின் சிறப்பு அம்சமா? நம்ம Dr லட்சுமிநாராயணன் போன்றவர்கள் போனவருடம் வெறும் PHD ஐ வைத்துக்கொண்டு எதோ மருத்துவர்கள் போன்ற பிம்பத்தை கொடுத்து இந்தியாவில் 50 கோடி பேர் கொரோனவால் பாதிக்கப்படுவார்கள் என்று கிலி கொடுத்துக்கொண்டிருந்தார்களே? அதுபோல் இப்போவும் கிளம்பிவிடுவார்கள் சிறிது நாட்களில்
Rate this:
Cancel
fhu -  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-202112:34:03 IST Report Abuse
fhu some one decide, how others to live and when to die, this is the real strategy behind this corona and all other buisness in the world.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
04-டிச-202110:09:14 IST Report Abuse
Sampath Kumar ஒருபக்கம் ஏச்சரிக்கை அறிக்கை மறுபக்கம் அதுல அறிக்கை இந்த உலக சுகாதாரமயம் யாரு உடைய காய் பாவை என்று உலகத்து தெய்ரயும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X