ராமநாதபுரம்: ராமநாதபுரத்திற்கு வைகை தண்ணீர் வரத்து அதிகரிப்பால், தொருவளூர், காவனுார், கார்குடி உள்ளிட்ட 10 கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. ரோடு சேதம், பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. துணை மின்நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் 30 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
வைகையில் 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வருகிறது. பார்த்திபனுாரிலிருந்து பரளை, இடது, வலது பிரதான கால்வாய்களுக்கு திறந்துவிட்டது போக ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதரம்பெரியகண்மாய் பாசன வாய்க்கால் வழியாக நேற்று காலை 8ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.ராமநாதபுரம் பெரியகண்மாயில்ஏற்கனவே 5.5அடி(மொத்தம் 7அடி)தண்ணீர் உள்ளதால் நயினார்கோயில் மதகு பகுதியிலிருந்து திருப்பி விடப்பட்ட உபரி நீர் தொருவளூரில் கண்மாயில் நிரம்பியது. கடலுக்கு செல்லும் வழியில்கரை சேதமடைந்து வயல்களில் தேங்கி வெள்ளக்காடாகியுள்ளது.
தொடர்ந்து தண்ணீர் வருவதால்சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. கார்குடி, முதலுார் காவனுார், காரேந்தல்உள்ளிட்ட 10 ஊர்களில் வெள்ளநீர் புகுந்து விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர்சூழ்ந்துள்ளது.
மூழ்கிய பாலம்
ராமநாதபுரத்திலிருந்து பாண்டியூர், நயினார்கோயில் செல்லும் பிரதான ரோட்டில் காவனுார் அருகே பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. இதனால் அவ்வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காவனுார் துணை மின்நிலையத்தை சுற்றியும் தண்ணீர் சூழ்ந்தது. பாதுகாப்பு கருதி மின்வினியோகம் மதியம் வரை நிறுத்தப்பட்டது.
![]()
|
நயினார்கோயில் ரோடு, தொருவளூரில்ஓடிய நீரில் பொது மக்கள் சிலர் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து ரோட்டில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொருவளூர் முன்னாள் ஊராட்சி தலைவர் காஜா முகைதீன் கூறுகையில்,' 10 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய அளவிற்கு வெள்ளசேதம் ஏற்பட்டுள்ளது. பெரியகண்மாய் வடகலுங்கு கரை பராமரிக்கப்படவில்லை. 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மூழ்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE