இந்தியா

அக்டோபரில் அதிகம் செலவழித்த மக்கள் : உச்சம் தொட்ட 'கிரெடிட் கார்டு' செலவினங்கள்

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மும்பை :கடந்த அக்டோபரில், 'கிரெடிட் கார்டு' வாயிலான செலவினங்கள், ௧ லட்சம் கோடி ரூபாயை முதன் முறையாக தாண்டியுள்ளது என, ரிசர்வ் வங்கி புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.பண்டிகை கால கொண்டாட்டத்தை முன்னிட்டு, அக்டோபர் மாதத்தில், கிரெடிட் கார்டு செலவினங்கள் அதிகரித்து, இதுவரை இல்லாத வகையில், முதன் முறையாக ௧ லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தை விட,
அக்டோபரில் அதிகம் செலவழித்த மக்கள்உச்சம் தொட்ட 'கிரெடிட் கார்டு' செலவினங்கள்

மும்பை :கடந்த அக்டோபரில், 'கிரெடிட் கார்டு' வாயிலான செலவினங்கள், ௧ லட்சம் கோடி ரூபாயை முதன் முறையாக தாண்டியுள்ளது என, ரிசர்வ் வங்கி புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பண்டிகை கால கொண்டாட்டத்தை முன்னிட்டு, அக்டோபர் மாதத்தில், கிரெடிட் கார்டு செலவினங்கள் அதிகரித்து, இதுவரை இல்லாத வகையில், முதன் முறையாக ௧ லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தை விட, அக்டோபரில் கிரெடிட் கார்டு செலவினங்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும்போது 56 சதவீதம் அதிகரித்து உள்ளது.

இதற்கு முன் அதிகபட்சமாக, கடந்த செப்டம்பரில் 80 ஆயிரத்து, 477 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோ பரில், அதையும் விஞ்சி ௧ லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.


latest tamil news



கடந்த சில மாதங்களாகவே, கிரெடிட் கார்டு வாயிலாக செய்யப்படும் செலவுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு, பண்டிகை காலமும் ஒரு முக்கியமான காரணமாகும்.
நாட்டில் வேகமான பொருளாதார மீட்சி ஏற்பட்டு வருவதை அடுத்து, தேவைகளும் அதிகரித்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக, செலவினங்களும் உயர்ந்துள்ளன.மேலும் வங்கிகள் கிரெடிட் கார்டு வழங்குவதும் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபரில் மட்டும், புதிதாக 13.3 லட்சம் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கிரெடிட் கார்டு வாயிலான செலவினங்கள் மட்டுமின்றி; ரொக்க செலவுகளும் இந்த பண்டிகை காலத்தில் அதிகரித்து
உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ELLAPPARAJ - coimbatore,இந்தியா
04-டிச-202112:43:01 IST Report Abuse
ELLAPPARAJ பொருளாதாரம் வளர்ந்திருந்த கையில காசு இருந்த கிரெடிட் கார்டு பக்கம் ஏப்பா போக போறாங்க, ஏதோ வேற வழியில்லாத பாட்டுக்கு குழந்தைகளையும் மனைவியையும் சந்தோசப்படுத்தணும்னு கார்டா சொரண்டிப்போட்டு அடுத்த மாசம் பில் வரும்பொழுது கண்ணாமுழி திருகி நிக்கிறது யாருக்கு தெரிய போகுது. ஜவுளிக்கடை முதலாளியும் நகை கடை முதலாளியும் வேணுமுன்னா பொருளாதாரத்துல வளர்ந்துருப்பாங்க.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
04-டிச-202110:00:03 IST Report Abuse
duruvasar எங்கும் கூறாத 15 லட்சம் கிடைக்காமல் உயிர் போகாது என்ற கோட்பாடுடன் வாழ்பவர்கள் செலவழித்த கிரிடிட் கார்டு பணத்தை திருப்பி செலுத்தமாட்டார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.
Rate this:
Cancel
04-டிச-202107:27:41 IST Report Abuse
அப்புசாமி கிரெடிட் கார்டில் கடன் வாங்கு... ஸ்வீட் எடு... கொண்டாடு. கட்ட முடியலேன்னா, வாராக்கடன் வங்கில உங்க கடனையும் சேத்துருவாங்க. புதுசா பணம் ஒரு 20 லட்சம் கோடி நிர்மா ஜீ குடுத்துருவாங்க. ஜெய் ஹிந்த்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X