பொது செய்தி

இந்தியா

'ஏர் இந்தியா'வுக்கு வெளிநாட்டு சி.இ.ஓ., : 'டாடா சன்ஸ்' புதிய முயற்சி

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி ;'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு தகுதி வாய்ந்த, புதிய தலைமை செயல் அதிகாரி ஒருவரை நியமிக்கும் முயற்சியில், 'டாடா சன்ஸ்' இறங்கி உள்ளது.கடந்த அக்டோபரில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவது குறித்து, மத்திய அரசுடன் டாடா சன்ஸ் ஒப்பந்தம் செய்தது.ஏர் இந்தியாவை, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா சன்ஸ் வாங்கிஉள்ளது.இதையடுத்து, வரும் ஜனவரி மாதத்தில் கைமாற்றத்துக்கான
'ஏர் இந்தியா' வெளிநாட்டு  சி.இ.ஓ., : 'டாடா சன்ஸ்' முயற்சி

புதுடில்லி ;'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு தகுதி வாய்ந்த, புதிய தலைமை செயல் அதிகாரி ஒருவரை நியமிக்கும் முயற்சியில், 'டாடா சன்ஸ்' இறங்கி உள்ளது.கடந்த அக்டோபரில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவது குறித்து, மத்திய அரசுடன் டாடா சன்ஸ் ஒப்பந்தம் செய்தது.ஏர் இந்தியாவை, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா சன்ஸ் வாங்கிஉள்ளது.
இதையடுத்து, வரும் ஜனவரி மாதத்தில் கைமாற்றத்துக்கான அனைத்து நடவடிக்கைகளும் முழுமை பெற்றுவிடும் என தெரிகிறது.


latest tamil news



இந்நிலையில், ஏர் இந்தியாவை எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்பது குறித்த ஆலோசனைகளில் டாடா சன்ஸ், தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக, ஏர் இந்தியாவுக்கு என தனியாக ஒரு சி.இ.ஓ., எனும் தலைமை செயல் அதிகாரியை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.குறிப்பாக, வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், ஏர் இந்தியாவை நடத்துவதற்கான குழுவினரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைக்கவும் டாடா சன்ஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, 'ஏர் ஆசியா இந்தியா' நிறுவனத்தையும், 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தையும் இணைத்து, ஏர் இந்தியாவின் பட்ஜெட் விமான சேவை பிரிவாக மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-டிச-202116:08:20 IST Report Abuse
அப்புசாமி இதுதாண்டா ஆத்மநிர்பரா...
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-202111:23:32 IST Report Abuse
Ramaraj P வாங்கியவரின் விருப்பம் யாரை வேண்டுமானாலும் நியமனம் செய்யலாம்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
04-டிச-202114:08:06 IST Report Abuse
Sanny யார்தான் அரசியலில் போல, வியாபாரத்தில் தலைமையை வாரிசுகளிடம் கொடுப்பான்....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
04-டிச-202109:07:57 IST Report Abuse
duruvasar எம்பிக்கள், அவர்கள் குடும்பம் , அரசு அதிகாரிகள் , அவர்கள் குடும்பம், ஊழியர்கள் அவர்கள் குடும்பம் இவர்களின் இலவச சவாரி வண்டிகளாக உபயோகித்தே போண்டி செய்யப்பட்டதை , வாங்கி டிங்கரிங், பட்டி பார்த்து அதை இயக்க செய்ய முயற்சி எடுதத்த டாடா குழுமத்திற்க்கு நன்றி. கார்பரேட் போராளிகள் நோயாளிகளாக மாறவேண்டிய தருணம் வந்துவிட்டது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X