பொது செய்தி

தமிழ்நாடு

'சைகோவ் - டி' தடுப்பூசி; நர்ஸ்களுக்கு விரைவில் பயிற்சி

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : இம்மாத இறுதிக்குள், 'சைகோவ் - டி' தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ளதால், சென்னை, மதுரை, கோவை, திருச்சி மாவட்டங்களில் உள்ள நர்ஸ்களுக்கு, விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.நம் நாட்டில் கொரோனா தொற்றுக்கு எதிராக, கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை, மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம்


சென்னை : இம்மாத இறுதிக்குள், 'சைகோவ் - டி' தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ளதால், சென்னை, மதுரை, கோவை, திருச்சி மாவட்டங்களில் உள்ள நர்ஸ்களுக்கு, விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.



latest tamil news



நம் நாட்டில் கொரோனா தொற்றுக்கு எதிராக, கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை, மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள, 'சைடஸ் கேடிலா' நிறுவனம், 'சைகோவ் - டி' என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது.

டி.என்.ஏ., அடிப்படையிலான, இந்த தடுப்பூசியை செலுத்த ஊசி தேவையில்லை. அதற்கு பதிலாக வலியில்லாத, 'ஜெட்' என்ற உபகரணம் வாயிலாக செலுத்தப்படும்; 28 நாட்கள் இடைவெளியில், மூன்று தவணையாக தடுப்பூசி போடப்படும். இந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அந்நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு வழங்க உள்ளது.


latest tamil news


முதற்கட்டமாக, தமிழகம், பீகார், மஹாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில், இவ்வகை தடுப்பூசி போடப்பட உள்ளது.தமிழகத்திற்கு, 11.6 லட்சம் டோஸ், சைகோவ் - டி தடுப்பூசி விரைவில் வர உள்ளது. இதனால், சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த நர்ஸ்களுக்கு, இவ்வகை தடுப்பூசி செலுத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:தமிழகத்தில் 1.50 கோடி பேர் முதல் தவணை; 80 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு கொள்ளாமல் உள்ளனர். தற்போது, 1.30 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். மக்கள் விரும்பினால், 'சைகோவ் - டி' தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-டிச-202116:49:18 IST Report Abuse
Bhaskaran Amerikaavil booster dose oosiyum poda aarambithu vittaargal .naan netru pottukonden
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
04-டிச-202109:33:03 IST Report Abuse
Ramesh Sargam இனி தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள், இனி மேல் புதுசு புதுசா உருமாற்றம் அடைந்து வரப்போகிற வைரஸ்களை நினைவில் கொண்டு, அந்த புது வித வைரஸ்களை எதிர்க்க கூடிய வாக்சீன்களை கண்டுபிடிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X