அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிட்கோ தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக பட்டா வழங்க குழு; அமைச்சர் அன்பரசன்

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : ''சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள குறு, சிறு நிறுவனங்களுக்கு, விரைந்து பட்டா வழங்க, தலைமை செயலர் தலைமையில் உயர்மட்ட செயலாக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார். தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று சென்னை, கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் அன்பரசன் தலைமை


சென்னை : ''சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள குறு, சிறு நிறுவனங்களுக்கு, விரைந்து பட்டா வழங்க, தலைமை செயலர் தலைமையில் உயர்மட்ட செயலாக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.



latest tamil news



தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று சென்னை, கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் அன்பரசன் தலைமை வகித்தார்.கூட்டத்தில், தமிழ்நாடு சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள, 100 தொழில் நிறுவனங்களுக்கு, விற்பனை பத்திர அனுமதி ஆணை; தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் வழியாக, புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தின் கீழ், ஒன்பது கண்டுபிடிப்பாளர்களுக்கு 16.22 லட்சம் ரூபாய் மானியம்.


latest tamil news



திறந்த கண்டுபிடிப்பு சவால் நிகழ்ச்சியில், சிறந்த தீர்வுகளை கூறிய இரண்டு நிறுவனங்களுக்கு முதல் பரிசாக 5.75 லட்சம் ரூபாய்; இரண்டாம் பரிசாக 3,75 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர் வழங்கினார்.

பின் அவர் பேசியதாவது: தமிழ்நாடு சிட்கோ சார்பில், ஏற்கனவே 122 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 413 ஏக்கர் நிலப்பரப்பில் 241 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து புதிய தொழிற்பேட்டைகள். கோவை மாவட்டத்தில், அரசு மானியத்துடன் ஒரு தனியார் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளை, விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

பல்வேறு நில வகைப்பாட்டினால், பட்டா வழங்க இயலாமல் உள்ள, சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள, நிலப் பிரச்னைகளை விரைந்து தீர்க்க, தலைமை செயலர் தலைமையில், உயர்மட்ட செயலாக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மாமல்லபுரத்தில் சிற்ப கலைஞர் தொழிற்பூங்கா 23 கோடி ரூபாய் மதிப்பில், 19 ஏக்கர் பரப்பில் அமைக்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை உடனடியாக தயாரித்து, அரசுக்கு சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
04-டிச-202117:46:58 IST Report Abuse
Tamilan அதற்க்கு மட்டும் நீர் ஆதாரங்கள் என்ற விசாரணை தேவையில்லையா ? அங்கு மனிதர்கள் இல்லாமல் ரோபோட்டை வைத்து வலை வாங்கப்போகிறார்களா ?.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-202113:52:54 IST Report Abuse
 rajan நிறுவனங்களிடம் இருந்து கமிஷன் பேரம் முடிந்து விட்டதா? பாவம் அப்பாவி மக்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு நிலத்தைப் பிடுங்கி நிறுவனங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கு விற்று சாதனை புரிகிறது அரசு.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
04-டிச-202111:22:27 IST Report Abuse
RajanRajan கட்டிங் போட வழி தேடுறானுங்களோ விடியல்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X