கீரப்பாளையம் பகுதியில் அமுதன் கிளினிக் துவக்கம்

Added : டிச 04, 2021 | |
Advertisement
புவனகிரி-கீரப்பாளையத்தில் 'அமுதன் கிளினிக்' மருத்துவ சேவையை தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் அழகிரி, ஆர்.கே மருத்துவமனை நிர்வாகி டாக்டர் முத்துக்குமரன் துவக்கி வைத்தனர்.ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் - உமாமகேஸ்வரி, அண்ணாமலை பல்கலைக்கழக உற்பத்தியியல் துறை இணைப் பேராசிரியர் சீனிவாசன் - இந்து தம்பதியினர், பொறியாளர் அருண்தர்பார் ஆகியோர் வரவேற்றனர். அரிமா சங்க

புவனகிரி-கீரப்பாளையத்தில் 'அமுதன் கிளினிக்' மருத்துவ சேவையை தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் அழகிரி, ஆர்.கே மருத்துவமனை நிர்வாகி டாக்டர் முத்துக்குமரன் துவக்கி வைத்தனர்.ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் - உமாமகேஸ்வரி, அண்ணாமலை பல்கலைக்கழக உற்பத்தியியல் துறை இணைப் பேராசிரியர் சீனிவாசன் - இந்து தம்பதியினர், பொறியாளர் அருண்தர்பார் ஆகியோர் வரவேற்றனர். அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் சுவேதக்குமார், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் அழகிரி குத்து விளக்கேற்றினார். சிதம்பரம் ஆர்.கே மருத்துவமனை நிர்வாகி முத்துக்குமரன் மருத்துவ மனையை திறந்து வைத்து மருத்துவ சேவையை துவக்கி வைத்தார். முக்கிய நிர்வாகிகள் சேதுராமன், முருகேசன், ஜெயக்குமார், வராகமூர்த்தி, பாலமுருகன், சிதம்பரம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் குமார், காங்., மூத்த நிர்வாகி வளவன்.தொழிலதிபர் ரத்தினசுப்பிரமணியன்,ரோட்டரி சங்க துணை ஆளுநர் கமல்சாந்த், உதவி தலைமை ஆசிரியர் முருகையன் உட்பட பலர் பங்கேற்றனர். மருத்துவமனை நிர்வாகி டாக்டர் அமுதநாதன் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X