தேங்காய் உடைத்த போது சாலையும் சிதறியது: ஒப்பந்தாரர் மீது நடவடிக்கை

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் ரூ.1.16 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட சாலையைத் திறந்து வைக்க எம்.எல்.ஏ.,வை அழைத்தனர். அவர் தேங்காய் உடைத்து திறந்து வைக்க முயன்ற போது தேங்காய் பட்டு சாலையும் சிதறியது. உ.பி., மாநிலம் பிஜ்னோர் சதார் தொகுதியின் எம்.எல்.ஏ., சுசி மவுசம் சவுத்ரி. இவர் தனது தொகுதியில் நீர்பாசனத் துறையினரால் ரூ.1.16 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலையை திறந்து


லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் ரூ.1.16 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட சாலையைத் திறந்து வைக்க எம்.எல்.ஏ.,வை அழைத்தனர். அவர் தேங்காய் உடைத்து திறந்து வைக்க முயன்ற போது தேங்காய் பட்டு சாலையும் சிதறியது.



latest tamil news



உ.பி., மாநிலம் பிஜ்னோர் சதார் தொகுதியின் எம்.எல்.ஏ., சுசி மவுசம் சவுத்ரி. இவர் தனது தொகுதியில் நீர்பாசனத் துறையினரால் ரூ.1.16 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைப்பதற்காக அழைக்கப்பட்டார்.

சடங்கிற்காக சூரத், தேங்காயை புதிய சாலையில் உடைத்துள்ளார். தேங்காயோடு சேர்ந்து சாலையும் சிதறியுள்ளது. இதனைக் கண்டு கோபமடைந்த அவர் அதிகாரிகளை வரவழைத்து மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வு செய்ய கோரினார்.


latest tamil news



மாதிரிகளை எடுக்கும் வரை சுமார் 3 மணி நேரம் அங்கே இருந்தார் எம்.எல்.ஏ., இது பற்றி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாலையை திறந்து வைக்கச் சொன்னார்கள். அங்கு வந்து தேங்காய் உடைக்க முயன்றபோது சாலையின் சிறு துண்டுகள் சிதறி வெளியேறியது.

கட்டுமானத்தில் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தேன். பணிகள் தரமானதாக இல்லை. திறப்பு விழாவை நிறுத்திவிட்டோம். மாவட்ட ஆட்சியரிடம் பேசினேன். 3 பேர் கொண்ட குழுவை அமைத்தார். சாலையின் மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தரமற்ற சாலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
04-டிச-202122:18:16 IST Report Abuse
அம்பி ஐயர் ஒருவேளாஇ... தேங்காய்க்குள்ள பாம் வச்சிருப்பாங்களோ....???
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ஏழு கிலோமீட்டர் பாதையமைக்க ஒப்பந்தம் போட்டு அதில் 10 % முடியும் போதே திறப்பு விழாவா? அதோடு பில்லை பாஸ் செய்து வாங்கிட்டு போயிடுவானுங்களோ? யோக்கிய ஆதித்யநாத் ஆட்சியின் அவலத்தை கல்லுந்தேங்காயுமா ஒடச்சிட்டாங்களே
Rate this:
Cancel
Madhu - Trichy,இந்தியா
04-டிச-202119:03:08 IST Report Abuse
 Madhu உடைக்கப் பட்டது சூரத் தேங்காய் அல்ல சாலைகளைப் போட்ட சூரர்களைப் போற்றுவதற்காக உடைக்கப் பட்ட தேங்காய் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X