பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் உயிரை காப்பாற்றிய நர்ஸ்; பொதுமக்கள் பாராட்டு

Added : டிச 04, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
திருவாரூர் : மன்னார்குடி அருகே விபத்தில் சிக்கி செயல்படாத மாணவரின் இதயத்தை செயல்பட வைத்த செவிலியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருவாக்குறிச்சியைச் சேர்ந்தவர் வசந்த் 18; பாலிடெக்னிக் இறுதியாண்டு படித்து வருகிறார். நேற்று லக்னாம்பேட்டை என்ற கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் வரும்போது செம்மறி ஆடுகள் மீது மோதி கீழே விழுந்ததில்

திருவாரூர் : மன்னார்குடி அருகே விபத்தில் சிக்கி செயல்படாத மாணவரின் இதயத்தை செயல்பட வைத்த செவிலியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருவாக்குறிச்சியைச் சேர்ந்தவர் வசந்த் 18; பாலிடெக்னிக் இறுதியாண்டு படித்து வருகிறார். நேற்று லக்னாம்பேட்டை என்ற கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் வரும்போது செம்மறி ஆடுகள் மீது மோதி கீழே விழுந்ததில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.



மாணவர் உயிரை காப்பாற்றிய நர்ஸ் பாராட்டு குவிகிறது

latest tamil news


அவ்வழியாக காரில் வந்த மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர் வனஜா கீழே கிடந்த வசந்தை பரிசோதித்து பார்த்துள்ளார். அவரது இதயம் செயல்படாததை அறிந்து, அவசர கால முதலுதவியாக இதய பகுதியை கைகளால் மசாஜ் செய்ததில் ரத்த ஓட்டம் சீராகி மாணவரின் இதயம் மீண்டும் செயல்பட துவங்கியது.

உடனடியாக மாணவருக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.மாணவர் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Bala - Chennai,இந்தியா
10-டிச-202110:10:38 IST Report Abuse
N Bala மிகவும் பாராட்டுக்குரிய சேவை புரிந்த சிஸ்டர் அவர்களுக்கு. வாழ்த்துக்கள். இவற்றை போன்று செயல்பட்டால் மனிதம் தழைத்தோங்கும் ...
Rate this:
Cancel
KayD - Mississauga,கனடா
09-டிச-202101:34:21 IST Report Abuse
KayD தொழில் தர்மத்தை காப்பற்றி விடீர்கள். நீங்கள் மென்மேலும் ஆசீர்வதிக்க பட்ட செவிலியர் ஆக உயர்த்த படுவீர்கள். உங்கள் hand தொடும் இடம் எல்லாம் சுகம் பெறுவார்கள் உங்களை நம்பி வந்த நோயாளிகள். மனதார வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
S.K. Praba - Madurai,இந்தியா
08-டிச-202116:09:34 IST Report Abuse
S.K. Praba சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X