பாதிரிக்குப்பத்தில் வடிகால் வசதி அய்யப்பன் எம்.எல்.ஏ., உறுதி

Added : டிச 04, 2021 | |
Advertisement
கடலுார்-கடலுார், பாதிரிக்குப்பம் ஊராட்சியில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்தப்படும் என அய்யப்பன் எம்.எல்.ஏ., கூறினார்.கடலுார், பாதிரிகுப்பம் ஆதிதிராவிடர் பகுதியில் மழையால் பாதித்த 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மழையால் பாதித்தவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, பிரட், பிஸ்கட் வழங்கி

கடலுார்-கடலுார், பாதிரிக்குப்பம் ஊராட்சியில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்தப்படும் என அய்யப்பன் எம்.எல்.ஏ., கூறினார்.கடலுார், பாதிரிகுப்பம் ஆதிதிராவிடர் பகுதியில் மழையால் பாதித்த 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மழையால் பாதித்தவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, பிரட், பிஸ்கட் வழங்கி பேசுகையில், 'தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்காக இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார். மக்களின் தேவைகளை அறிந்து அவர் செயல்படுகிறார். பாதிரிக்குப்பம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் எந்த அடிப்படை வசதியும் நிறைவேற்றவில்லை. இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படும்' என்றார்.ஊராட்சித் தலைவர் சரவணன், ஒன்றிய பொருளாளர் மணிமாறன், சமூக சேவகர் சக்திவேல், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், மாதர் நலத் தொண்டு நிறுவனர் ஸ்ரீமதி ராஜேந்திரன், கிளை செயலாளர்கள் கணேசன், அய்யனார் பங்கேற்றனர். கிளை செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X