மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் 90 சதவீதம்.. இதுவரை 30 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டது

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் இது வரை , 30 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கையில் 90 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்படும் நிலையில், தீவிரப்படுத்த வாரந்தோறும் சிறப்பு முகாம்கள்
மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் 90 சதவீதம்.. இதுவரை 30 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டது

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் இது வரை , 30 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கையில் 90 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்படும் நிலையில், தீவிரப்படுத்த வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதனால், 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது. கடலுார் மாவட்டத்தில் நேற்று வரையில் 30 லட்சத்து 2,866 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 18லட்சத்து 90 ஆயிரத்து 61 பேர் முதல் தவணையும், 11 லட்சத்து 12 ஆயிரத்து 805 பேர் இரண்டாவது தவணையும் செலுத்திக் கொண்டனர். இவர்களில் 44 வயதிற்குட்பட்டவர்கள் 18 லட்சத்து 57ஆயிரத்து 103 பேர், 45ல் இருந்து 60 வயதிற்குட்பட்டோர் 7 லட்சத்து 61 ஆயிரத்து 90 பேர், 60 வயதிற்கு மேற்பட்டோர் 3 லட்சத்து 84 ஆயிரத்து 673 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இது வரை தடுப்பூசி செலுத்த தகுதியான 22 லட்சம் பேரில், நேற்று வரை 90 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீதத்தினரும் விரைவில் செலுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனா தொற்றை முற்றிலும் தடுக்க, தடுப்பூசி பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதையொட்டி மாவட்டம் முழுவதும் வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் இது வரை 10க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது மேலும், வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் நடந்து வருகிறது. இதனால் தடுப்பூசிசெலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கண்டறிந்த உருமாறிய ஒமைக்ரான் வைரசை , தடுக்க சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால், கடலுார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X