மாற்று திறனாளிகளிடம் செயற்கை உறுப்புகளை அகற்ற உத்தரவிடக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

Added : டிச 04, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: 'விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் மாற்று திறனாளிகளிடம் செயற்கை உறுப்புகளை நீக்க உத்தரவிடக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மூளை வளர்ச்சியற்ற மாற்று திறனாளியான ஜீஜா கோஷ் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது:கோல்கட்டாவிலிருந்து கோவா மாநிலம் பனாஜியில் நடந்த மாநாட்டுக்கு
Court,Supreme Court, SC, கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,நீதிமன்றம்

புதுடில்லி: 'விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் மாற்று திறனாளிகளிடம் செயற்கை உறுப்புகளை நீக்க உத்தரவிடக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மூளை வளர்ச்சியற்ற மாற்று திறனாளியான ஜீஜா கோஷ் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது:கோல்கட்டாவிலிருந்து கோவா மாநிலம் பனாஜியில் நடந்த மாநாட்டுக்கு 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தில் ஜீஷா கோஷ் செல்ல இருந்தார்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அவரது செயற்கை உறுப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரால் விமானத்தில் பயணிக்க முடியவில்லை. இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


latest tamil newsஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: மாற்று திறனாளிகளிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு சோதனை என்ற பெயரில், அவர்களின் கவுரவம் பாதிக்கப்படும்படி செயல்படுவதை அனுமதிக்க முடியாது.விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைக்காக மாற்று திறனாளிகளிடம் செயற்கை உறுப்புகளை அகற்றும்படி கூறக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
04-டிச-202112:08:49 IST Report Abuse
Lion Drsekar ஒருவிதத்தில் பாராட்டப்படவேண்டிய ஒன்று அதே நேரத்தில் இன்றய வியாபார உலகில் மக்கள் எதை வைத்துக்கொண்டு குறுக்கு வழியில் எப்படியெல்லாம் சம்பாதித்து சீக்கிரத்தில் கோடீஸ்வரனாகலாம் என்று போட்டிபோட்டுக்கொண்டு இயங்கும் இந்த நிஜ வாழ்வில் எந்த புற்றில் எந்த பாம்பு என்ற நிலையில் இருக்க சற்று சிந்திக்கவும் வேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Roy -  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-202107:47:47 IST Report Abuse
Roy Terrorist will use diffently abled person to bomb an aircraft, explosive material could be hidden in artificial limb, Court must know its limits, They must dispoe pending cases at the earliest, They are paid from peoples money
Rate this:
04-டிச-202109:55:27 IST Report Abuse
Thulasi Raman5945090...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X