ஒமைக்ரானை நினைத்து பீதி வேண்டாம்: விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
ஜெனிவா : உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், “ஒமைக்ரான் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். தடுப்பூசிகளை மாற்றியமைக்க வேண்டுமா என்பதை இவ்வளவு சீக்கிரத்தில் சொல்ல முடியாது” என்றார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன மாநாடு ஒன்றில் கலந்துக்கொண்டு சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: ஓமைக்ரான் தீவிரமான வகையாக மாறுமா என்று


ஜெனிவா : உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், “ஒமைக்ரான் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். தடுப்பூசிகளை மாற்றியமைக்க வேண்டுமா என்பதை இவ்வளவு சீக்கிரத்தில் சொல்ல முடியாது” என்றார்.



latest tamil news


ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன மாநாடு ஒன்றில் கலந்துக்கொண்டு சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: ஓமைக்ரான் தீவிரமான வகையாக மாறுமா என்று கணிக்க இயலாது. மிகவும் பரவக்கூடியதாக உள்ளது. தென் ஆப்ரிக்காவில் தினசரி பாதிப்பு இரட்டிப்பாகிறது.

நாம் தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் பீதி அடையாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் ஓரு வருடத்திற்கு முன்பு இருந்த சூழ்நிலையிலிருந்து நாம் மாறுபட்டு உள்ளோம். தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.


latest tamil news



உலகளவில் 99% நோய்த் தொற்றுக்கு டெல்டா வகை காரணம். இந்த உருமாறிய வைரஸும் அதிகம் பரவக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனாலும் தற்போது கணிக்க முடியாது. நாம் காத்திருக்க வேண்டும்.

இது சாதாரணமானது என நம்புவோம். இவ்வளவு சீக்கிரம் ஒட்டுமொத்தமாக ஒமைக்ரான் வகை பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாது. இவ்வாறு பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
04-டிச-202117:44:42 IST Report Abuse
Tamilan பீதி அடைய வேண்டியதில்லை . விஞ்சான ரீதியாக மூக்கு வாய்க்கு ஒரு ப்லாட்த்திரியை போட்டுக்கொண்டு , யாரையும் தொடாமல் இடைவெளிவிட்டு விஞ்சான தீண்ண்டாமையை மறக்காமல் கடைபிடிக்கவேண்டியதுதானே ?. வருடம் முழுவதும் கடைபிடிக்கவேண்டியதுதானே ?. உலகளாவிய பொருளாதார கும்பல்கள், கார்பொரேட் கொள்ளையர்கள் ,சந்தையில் உள்ள பொருளாதார ரவுடிகள் குன்றகளுக்கு தங்கள் பணத்தை வாரியிறைத்து விட்டு இழைத்த வாயர்களைப்போல் திரிய வேண்டுயதுதான் . விஞ்சான தீண்டாமை பிளாஸ்திரி போட்டுக்கொண்டதால் மக்கள் இளித்தவாயர்கள் என்பது யாருக்கும் தெரியாது .
Rate this:
Cancel
04-டிச-202116:35:08 IST Report Abuse
முருகன் பீதி அடையாமல் பிறகு என்ன மகிழ்ச்சியாக வா இருக்க முடியும். மக்களை குழப்பத்தில் வைப்பதே வேலை.
Rate this:
Cancel
Senthil Kumar - Port Blair,இந்தியா
04-டிச-202115:55:05 IST Report Abuse
Senthil Kumar நீங்க பயப்பட வேண்டாம்னு சொன்னதால்தான் எங்களுக்கு பயமாக உள்ளது😂
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X