பொது செய்தி

இந்தியா

தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஐதராபாத்: தமிழக முன்னாள் கவர்னரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். அவருக்கு வயது 88. உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.,4) காலை அவரின் உயிர் பிரிந்தது.ஆந்திர முதல்வராக இருந்து வந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து
Former Governor, Tamil Nadu, Rosaiah, passed away, தமிழகம், முன்னாள் கவர்னர், ரோசய்யா, மறைவு

ஐதராபாத்: தமிழக முன்னாள் கவர்னரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். அவருக்கு வயது 88. உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.,4) காலை அவரின் உயிர் பிரிந்தது.

ஆந்திர முதல்வராக இருந்து வந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ரோசய்யா கடந்த 2009ம் ஆண்டு அம்மாநில முதல்வராகப் பதவியேற்றார். 2010 நவம்பர் 24 வரை மட்டுமே அவர் அப்பதவியில் நீடித்தார். அதற்குள் ஆந்திர மாநில காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுக்க அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.


latest tamil news


ஆந்திர அரசியலில் மிகவும் பலம் வாய்ந்தவராக இருந்தவர் ரோசய்யா கடந்த 1979 முதல் 2009 வரை அமைச்சராக இருந்தவர். 16 முறை ஆந்திர மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். பலம் வாய்ந்த ரோசய்யா உட்கட்சிப் பூசலால் பதவியை துறந்தபோது அவர் கடும் அதிருப்தியில் இருந்தார்.

அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அவரை தமிழக கவர்னராக நியமித்தது. அப்போது அரசியல் வட்டாரத்தில் சமாதான முயற்சியாக ரோசய்யாவுக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

தமிழக கவர்னராக ரோசய்யா 2011 முதல் 2016 வரை பணியாற்றி உள்ளார். 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பா.ஜ., ஆட்சிக்கு வந்ததால் தமிழக கவர்னர் ரோசய்யா மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மாற்றப்படவில்லை. பதவிக்காலம் முழுவதும் நீடித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ரோசய்யா தான் தமிழக கவர்னராக இருந்தார். அவர், அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 2016 செப்டம்பர் 30ம் தேதி அவரது பதவிக்காலம் முடிந்தது. அவர் விடைபெற்றுச் சென்றார்.கவர்னர் பதவிக்காலம் முடிந்து ஒய்வு பெற்ற பின்னர் ரோசய்யா தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று (டிச.,4) காலை காலமானார்.அவரது உடலுக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சிலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat Subbarao - Chennai,இந்தியா
04-டிச-202120:16:18 IST Report Abuse
Venkat Subbarao ஆளும்கட்சி தவறு செய்யும்போது மத்திய உள்துறைக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும். இவர் கவர்னர் மாளிகையில் சொகுசு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சிகள் ஏதாவது புகார் அளித்தால் அதன்மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டார்
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
04-டிச-202117:50:54 IST Report Abuse
S. Bharani Lion DrSekar உங்கள் மனவலியை நானும் உணர்கிறேன் உங்கள் கோரிக்கையை முற்றிலும் ஆதரிக்கிறேன் காலம் மாறும் அரசியல் மாற்றம் நல்ல நேர்மையான நாடாக மாற்றும் காத்திருப்போம் இதுவும் கடந்து போகும் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கீ ஜே
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
04-டிச-202117:13:25 IST Report Abuse
INDIAN Kumar நல்லவர்கள் மக்கள் மனதில் வாழ்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X