பொது செய்தி

தமிழ்நாடு

'ஜாவத்' புயலால் 7 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021
Share
Advertisement
சென்னை: 'ஜாவத்' புயல் காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (டிச.,4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:'ஜாவத்' சூறாவளி காரணமாக ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்களைக் கிழக்கு கடற்கரை ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
Southern Railway, Announces, Cancellation, 7 Train Services,Jowat Storm, ஜோவத் புயல், 7 ரயில் சேவைகள், ரத்து, தெற்கு ரயில்வே, அறிவிப்பு,

சென்னை: 'ஜாவத்' புயல் காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (டிச.,4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:



'ஜாவத்' சூறாவளி காரணமாக ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்களைக் கிழக்கு கடற்கரை ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதுடன், பயணப் பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.


latest tamil news



ரயில் சேவைகள் ரத்து விவரங்கள்:



* இன்று (டிச.4) எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் மெயில்.* தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ்.* தாம்பரம் - ஜசிதி வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்.* ஹவுரா - எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் மெயில்.* விழுப்புரம் ஜே.என் - புருலியா இரு வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்.* நாளை (டிச.5) எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்.* பூரி - எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ். குறிப்பிட்ட ரயில் சேவைகள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது.

இதே போன்று ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், இன்று ஆலப்புழாவில் இருந்து மாலை 6.00 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டு, கூடூர், பல்ஹர்ஷா மற்றும் ஜார்சுகுடா என மாற்று வழியில் இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X