அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைப்பாளர் பதவி: பழனிசாமி, பன்னீர்செல்வம் வேட்புமனு

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட முறையே பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.அ.தி.மு.க.,வில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில், கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு, வரும், 7ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்
ADMK,Panneerselvam,அ.தி.மு.க,பன்னீர்செல்வம்

சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட முறையே பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க.,வில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில், கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு, வரும், 7ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள், ஒற்றை ஓட்டின் வழியே இணைந்தே தேர்வு செய்வர் என, கட்சி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல், நேற்று (டிச.,3) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் துவங்கியது.


latest tamil news




இந்நிலையில், இன்று தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
04-டிச-202122:21:44 IST Report Abuse
Gokul Krishnan இங்கு கருத்து பதிவிடுவபர்கள் அ தி மு க வில் ஜனநாயகம் இல்லை என்று கூக்குரல் இடுகிறார்கள் ஏன் காங்கிரஸ், தி மு க ,ம தி மு க , தெலுகு தேசம், சமாஜவாதி பகுஜன் சமாஜ் மற்றும் உமர் அப்துல்லாஹ் , முப்தி முஹம்மது நடத்தும் கட்சிகள் ஜனநாயகத்தை கண்டால் சொல்லவும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா கட்சிகளிலும் இது தான் நடக்கிறது
Rate this:
Cancel
04-டிச-202118:13:18 IST Report Abuse
ஆரூர் ரங் ஆக இனியும் இது PP( PANNEER பிளஸ் PALANI) கட்சியாகவே தொடரும். ஆனா 52 வருஷமா பெப்பே கட்சியா இருக்கும் திமுகதான் சீனியர் பரம்பரை கட்சி( புரிந்தவன் பிஸ்தா 🙃)
Rate this:
Cancel
K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா
04-டிச-202118:12:20 IST Report Abuse
K.SANTHANAM கட்சியின் பொன்விழாவில் பதவி ஏற்கும் இருவரும் தொடர்ந்து ஆட்சியை கைப்பற்ற கடுமையாக உழையுங்கள். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X