பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் அமைதி நிலவுகிறது; அமித்ஷா பெருமிதம்

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி: காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னர், அங்கு அமைதி திரும்பி முதலீடு வந்து கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசியதாவது: காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்படும் என யாரும் நம்பவில்லை. ஆனால், கடந்த 2019ல் பிரதமர் மோடி அதனை
Kashmir ,peace, investment, tourists,  370 abrogation, Amit Shah, modi, Pmmodi,

புதுடில்லி: காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னர், அங்கு அமைதி திரும்பி முதலீடு வந்து கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசியதாவது: காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்படும் என யாரும் நம்பவில்லை. ஆனால், கடந்த 2019ல் பிரதமர் மோடி அதனை செய்தார். தற்போது காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. சுற்றுலாவும் ஊக்கம் பெறுகிறது. காஷ்மீர் தற்போது, இந்தியாவுடன் ஒருங்கிணைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்திய எல்லைகளில் அத்துமீறுவது எளிதாக இருக்காது என்பதை பாகிஸ்தானிற்கு, சர்ஜிக்கல் தாக்குதல் மூலம் மோடி நிரூபித்துள்ளார். இது போன்ற தாக்குதல்களை முன்னர், இஸ்ரேலும், அமெரிக்கா மட்டுமே செய்துவந்தன. இந்த பட்டியலில் தற்போது இந்தியா இணைந்துள்ளது. அனைவருடனும் அமைதி நிலவுவதையே இந்தியா விரும்புகிறது. எல்லை பாதுகாப்பு என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்காக வலிமையான , உறுதியான செய்தியை நாம் அளித்துள்ளோம்.

கோவிட்டால், பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரம், பிரதமர் மோடியின் கொள்கை காரணமாக மீண்டு வருகிறது. தற்போது, உலகில் மிகவும் வேகமான பொருளாதாரமாக இந்தியா உள்ளது.


latest tamil news



மோடி, பிரதமராக பதவியேற்பதற்கு முன்னர், நாட்டில், பிரதமர் அலுவலகம் ஓரங்கட்டப்பட்டது. உலகளவில் இந்தியாவின் மரியாதை குறைந்தது. நீண்ட காலமாக கூட்டணி ஆட்சி இருந்து வந்த இந்தியாவில், கடந்த 2014ம் ஆண்டு, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தினோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
04-டிச-202122:04:30 IST Report Abuse
Tamilan இப்போது உலகமே அமைதியாகத்தான் உள்ளது . இந்தியா உள்ளிட்ட உலகம். எப்போது அடித்துக்கொள்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அப்போது என்னநடக்கும் என்று கணக்கிடமுடியாது
Rate this:
Cancel
K.GOPINATHRAJA - cuddalore,இந்தியா
04-டிச-202120:42:44 IST Report Abuse
K.GOPINATHRAJA கோபாலபுரம் அடிமைகளின் பகுத்தறிவு தத்துவம்
Rate this:
Cancel
K.GOPINATHRAJA - cuddalore,இந்தியா
04-டிச-202120:41:49 IST Report Abuse
K.GOPINATHRAJA கோபாலபுரம் adimaig
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X