பொது செய்தி

இந்தியா

ஒத்திவைக்க வைத்தது ஒமைக்ரான்: இந்தியா- தென் ஆப்ரிக்கா டி-20 தொடர் தள்ளிப்போனது

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: ஒமைக்ரான் தொற்று காரணமாக, தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள பி.சி.சி.ஐ., டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.தென் ஆப்ரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒரு நாள், நான்கு 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய அணி திட்டமிட்டிருந்தது. முதல் டெஸ்ட் டிச.,17 ல் ஜோகனஸ்பர்க்கில்
india, southafrica,cricket

புதுடில்லி: ஒமைக்ரான் தொற்று காரணமாக, தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள பி.சி.சி.ஐ., டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒரு நாள், நான்கு 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய அணி திட்டமிட்டிருந்தது. முதல் டெஸ்ட் டிச.,17 ல் ஜோகனஸ்பர்க்கில் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் திடீரென பரவி வரும் 'ஒமைக்ரான்' என்ற புது வகை கோவிட் வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், இந்திய அணியின் தென் ஆப்ரிக்க பயணம் குறித்து பல கேள்வி எழுந்தது.


latest tamil news


இந்நிலையில், பி.சி.சி.ஐ., பொது செயலர் ஜெய்ஷா கூறியதாவது: தென் ஆப்ரிக்காவில் நடக்கும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கும். ஆனால், 4 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடர் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது என்றார். இந்த முடிவு, தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியத்திடம் பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-டிச-202119:54:45 IST Report Abuse
நட்ராஜ் T20 போட்டியில் விளையாடினால் தொற்றி கொள்ளும் "ஒமிக்ரான் வைரஸ்", டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரின் போது லீவ் eduththukkumaa?
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
04-டிச-202118:49:46 IST Report Abuse
A.George Alphonse இது ஒரு தேவையற்ற விளையாட்டு. இதை முற்றிலும் நிறுத்தினால் தான் நாடும், இந்த உலகமும் உருப்படும்.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
04-டிச-202116:07:27 IST Report Abuse
vnatarajan இப்படியே தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளை நடத்திக்கொண்டு போனால் ஒருநாள் அதன்மீது மக்களுக்குள்ள மோகம் குறைந்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X