புதுடில்லி: ஒமைக்ரான் தொற்று காரணமாக, தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள பி.சி.சி.ஐ., டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒரு நாள், நான்கு 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய அணி திட்டமிட்டிருந்தது. முதல் டெஸ்ட் டிச.,17 ல் ஜோகனஸ்பர்க்கில் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் திடீரென பரவி வரும் 'ஒமைக்ரான்' என்ற புது வகை கோவிட் வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், இந்திய அணியின் தென் ஆப்ரிக்க பயணம் குறித்து பல கேள்வி எழுந்தது.

இந்நிலையில், பி.சி.சி.ஐ., பொது செயலர் ஜெய்ஷா கூறியதாவது: தென் ஆப்ரிக்காவில் நடக்கும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கும். ஆனால், 4 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடர் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது என்றார். இந்த முடிவு, தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியத்திடம் பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE