பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை!

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (டிச.,4) இடி மின்னலுடன் கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியசன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று
Heavy Rain, Expected 7 Districts, Today, Meteorological Department Said, தமிழகம், 7 மாவட்டங்கம், கொட்டப்போகுது, கனமழை,

சென்னை: ‛‛தமிழகத்தில் திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (டிச.,4) இடி மின்னலுடன் கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியசன் தெரிவித்தார்.


latest tamil news



இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:



தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (டிச.,4ம் தேதி): திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news


Advertisement

நாளை 5ம் தேதி: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

வரும் 8 ம் தேதி: துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news




சென்னையை பொறுத்தவரை:



அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பதிவு:



latest tamil news


எடப்பாடி (சேலம்), மோகனுார் (நாமக்கல்) தலா 9 செ.மீ., வெம்பக்கோட்டை (விருதுநகர்) 8 செ.மீ., மேட்டூர் (சேலம்) 7 செ.மீ., திருச்செங்கோடு, ராசிபுரம் (நாமக்கல்), சேலம் தலா 5 செ.மீ., நாகர்கோயில் (கன்னியாகுமரி), சிவகாசி (விருதுநகர்) தலா 4 செ.மீ., வாடிப்பட்டி (மதுரை), ஸ்ரீவில்லிபுத்துார் (விருதுநகர்) தலா 3 செ.மீ., வால்பாறை, சின்னக்கல்லார் (கோவை), ராஜபாளையம் (விருதுநகர்), குன்னுார் (நீலகிரி), தேக்கடி (தேனி), தாளவாடி (ஈரோடு) தலா 2 செ.மீ.,


மீனவர்களுக்கான எச்சரிக்கை:




வங்கக்கடல் பகுதிகள்:




latest tamil news


இன்று 4ம் தேதி: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடைஇடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை 5ம் தேதி: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, ஆந்திரா மற்றும ஒடிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று காரணமாக 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X