பொது செய்தி

இந்தியா

அமேதியில் 5 லட்சம் ஏகே203 ரைபிள் தயாரிப்பு: மத்திய அரசு ஒப்புதல்

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: உ.பி.,யின் அமேதியில் உள்ள கோர்வா பகுதியில் 5 லட்சம் ஏகே203 ரைபிள் தயாரிப்பதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், அமேதியின் கோர்வா பகுதியில் ரஷ்யாவின் ஒத்துழைப்போடு, 5 லட்சம் ஏகே 203 ரைபிள் தயாரிப்பதற்கான திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம், உ.பி., பாதுகாப்பு
Govt, AK-203,   rifles, Amethi

புதுடில்லி: உ.பி.,யின் அமேதியில் உள்ள கோர்வா பகுதியில் 5 லட்சம் ஏகே203 ரைபிள் தயாரிப்பதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், அமேதியின் கோர்வா பகுதியில் ரஷ்யாவின் ஒத்துழைப்போடு, 5 லட்சம் ஏகே 203 ரைபிள் தயாரிப்பதற்கான திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம், உ.பி., பாதுகாப்பு துறையில் மையமாக மாறும் சூழ்நிலையில் உள்ளது. மேலும், பாதுகாப்பு கருவிகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை தவிர்த்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளது. ரஷ்யா பங்களிப்புடன் செயல்படும் இந்த திட்டமானது, பாதுகாப்பு துறையில், இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஆழ்ந்த ஒத்துழைப்பை வெளிக்காட்டுகிறது. இந்த திட்டம் மூலம் பல சிறுகுறு நிறுவனங்களுக்கு தொழில் வாயப்பு கிடைக்கும். திட்டத்திற்கு தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் சப்ளைக்கு பாதுகாப்பு சார்ந்த தொழில்துறைகள் பயன்படுத்தப்பட உள்ளதால், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது, பாதுகாப்பு துறையில் பயன்பாட்டில் உள்ள இன்சாஸ் ரைபிளுக்கு மாற்றாக இந்த ஏகே 203 ரைபிள்கள் பயன்படுத்தப்பட உள்ளது.


latest tamil news


மிக இலகுவான, வலிமையான, நவீன ரைபிளான ஏகே 203 ரைபிள் பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளதுடன் 300 மீ., தூரத்தில் உள்ள இலக்குகளை சுடவும் முடியும். பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய ராணுவத்திற்கு இந்த ரைபிள்கள் உதவியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-டிச-202122:14:21 IST Report Abuse
அனந்த நாராயணன் பாலிமர் தொலைக் காட்சியில், ஏ.கே.203 மூலம் 800மீட்டர் தூரத்தில் உள்ளஇலக்கை துல்லிபமாக தாக்கி அழிக்க முடியும் என்று செய்தி வாசிக்கப்பட்டது! நீங்கள் 300 மீட்டர்என்கிறீர்கள்! எது சரி?
Rate this:
Cancel
Sundar Anand - Chennai,இந்தியா
04-டிச-202120:18:12 IST Report Abuse
Sundar Anand பிரமாதம் திரு மோடி அவர்களே வாழ்க பாரதம் வளர்க பாரதம் தன்னிறைவு நோக்கி இந்தியா
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-டிச-202120:12:26 IST Report Abuse
sankaseshan Kutra பிரதேசம் இல்லை ரௌடிகள் எனகவுண்டரில் போட்டு தள்ளியிருள்கிறார் யோகி அகிலேஷ் ஆட்சியில் ரௌடிகள் அட்டகாசம் செய்தனர் விடியலாட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளது பச்சயாப்ப பேப்பர் படிக்கும் வழக்கம் உண்டா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X