திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, வாங்காத நகை கடனுக்கு, ஒரு கோடியே, 85 லட்சம் ரூபாய்க்கு, வட்டி கட்டி நகையை உரிமையாளர்கள் மீட்டு சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. செயலாளராக குப்புசாமி உள்ளார். தலைவராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த ரவிச்சந்திரன் உள்ளார். கடந்த பிப்., 25, 26 ஆகிய தேதிகளில் அப்பகுதியை சேர்ந்த, 243 பேரிடம், ஒரு கோடியே, 75 லட்சம் ரூபாய் நகை கடன் தருவதற்காக நகையை பெற்றனர். ஆனால் இதுவரை நகை அடகு வைத்ததற்கான பணம், நகை உரிமையாளர்களுக்கு வழங்கவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நகையை அடகு வைத்ததற்காக அசல் மற்றும் வட்டி தொகையை செலுத்தி நகையை திரும்ப பெற்று செல்லுமாறு, நகை அடகு வைத்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வங்கியை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்களிடம், வட்டி தொகையை மட்டும் செலுத்திவிட்டு நகையை பெற்று செல்லுமாறு வங்கி செயலாளர் கூறினார். இதையடுத்து, வாங்காத நகை கடனுக்கு வட்டி செலுத்திவிட்டு, நகையை அதன் உரிமையாளர்கள் பெற்று சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE