மத்திய அரசு தூங்குகிறது: ராகுல் புகார்

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
புதுடில்லி; மக்களுக்கு வலி மற்றும் இழப்பு என்று வரும்போது மத்திய அரசு தூங்குகிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.கோவிட்டால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.இது தொடர்பாக ஆன்லைனில் பிரசாரம் மேற்கொண்டுள்ள அக்கட்சி, கோவிட்டால் உயிரிழந்தவர்களின் உண்மையான விவரத்தை வெளியிட வேண்டும்; அவர்களின்
SpeakUpforCovidNyay, Congress,Rahul,Rahul Gandhi, காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி; மக்களுக்கு வலி மற்றும் இழப்பு என்று வரும்போது மத்திய அரசு தூங்குகிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

கோவிட்டால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.இது தொடர்பாக ஆன்லைனில் பிரசாரம் மேற்கொண்டுள்ள அக்கட்சி, கோவிட்டால் உயிரிழந்தவர்களின் உண்மையான விவரத்தை வெளியிட வேண்டும்; அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. கோவிட்டால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைத்து, இந்த வைரஸ் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்ததை மக்களிடம் இருந்து மறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளது. கோவிட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.


latest tamil news


இந்நிலையில், அக்கட்சி முன்னாள் தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மக்களுக்கு வலி மற்றும் இழப்பு என வரும்போது மத்திய அரசு தூங்குகிறது. அவர்களை நாம் எழுப்புவோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
05-டிச-202110:53:04 IST Report Abuse
Kumar ஏதாவது கனவு காண வேண்டியது. அப்பறம் திடீரென்று முழிப்பு வந்தவுடன் எதாவது உளற வேண்டியது. அப்பறமா தூங்க வேண்டியது. இதுவே பப்புவோட பொழப்பா போச்சு. இந்த உளறலுக்கும் பாவம் பாவடைகளும், மூர்க்கர்களும் ரொம்ப முட்டு கொடுக்க வேண்டி இருக்கு. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-டிச-202109:12:38 IST Report Abuse
Kasimani Baskaran ஐயகோ... தமிழகத்தில் விடியல் வந்துவிட்டது என்பதை ஒருவரும் இளவரசருக்கு சொல்லவில்லயா அல்லது பிரதமர் பதவிக்கு போட்டியிட இன்னொருவர் கூட்டணியில் தயாரான அதிர்ச்சியில் விடிந்தது தெரியவில்லையா?
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
05-டிச-202105:42:53 IST Report Abuse
M S RAGHUNATHAN ராகுல் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு ஆகிவிட்டதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X